புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்த வாரிசு சூட்டிங்.. முட்டுக்கட்டை போட்ட இயக்குனர்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய், வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, குஷ்பூ, ஜெயசுதா, சங்கீதா, ஸ்ரீமன் என ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வந்தது. ஹைதராபாத்தில் சினிமா தொழிலாளர்கள் போராட்டம் செய்த போதும் தமிழ் படங்களின் சூட்டிங் நடத்தலாம் என்று சொன்னவுடன் வாரிசு படத்தின் சூட்டிங் நடந்து வந்தது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக வாரிசு படத்தை வெளியிட விரைவில் தயார் செய்து வந்தனர் படக்குழு.

Also Read :வாரிசு படத்தை ஓடிடி-யில் வெளியிட தில்லு இருக்கா? ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்

அதுமட்டுமின்றி அவ்வப்போது வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் யாரும் போன் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டி உள்ளதாம். ஆனால் அதற்குள்ளாகவே வாரிசு படத்தின் இயக்குனர் வம்சிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. அதிக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.

Also Read :சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த விஜய்.. நிராகரிக் இப்படி ஒரு காரணமா?

முழு நேரமும் வாரிசு படத்தை பற்றிய யோசித்துக் கொண்டிருந்தத வம்சிக்கு இவ்வாறு நேர்ந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் குறைந்தபட்சம் 10 நாட்கள் ஆவது ஓய்வில் இருக்க அறிவுரை கூறியுள்ளனர். வம்சிக்காக தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்த வாரிசு படத்தின் சூட்டிங் யார் கண் பட்டதோ தற்போது தடைபட்டு போய்ப் உள்ளது. ஆனால் மிக விரைவில் மீண்டும் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் வாரிசு சூட்டிங் தள்ளிப்போன செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read :சம்பளமே இல்லாமல் நடிக்க ரெடி.. விஜய்க்காக விட்டுக் கொடுத்த பிரபலம்

Trending News