புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூர்யா கொடுக்க போகும் அந்த மாபெரும் விருந்து.. யாரு யாருக்கு ஸ்கெட்ச் போடுதானே தெரியல

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீசாகி சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. விக்ரம் படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்த, கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன்3-ம் தேதி திரையரங்கில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸில் படங்கள் தயாரிக்க புது வேகம் காட்டி வருகிறார்.

எல்லா ஹீரோக்களிடம் கால்சீட் வாங்குகிறார். தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்த அவர், அதற்கு பிறகு மும்முரமாக படங்களை தயாரிக்க உள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன், விஜய் போன்ற நடிகர்களை வைத்து கமல் படம் தயாரிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது.

இதற்காக விஜய் இடமும் கால்ஷீட் கேட்கப்பட்டது. அவரும் இரண்டு படங்களுக்கு பிறகு கமலுடன் இணைகிறார். முதல் கட்டமாக சிவகார்த்திகேயன் டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனது 21-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாக உள்ள வரலாற்று கதையம்ச திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் நடிக்கும் படத்தை கமல் தயாரிக்கிறார்.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இந்நிலையில் விக்ரம் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்துள்ளதால் அதன் காரணமாக ஏற்பட்ட நட்பில் கமலை விருந்துக்கு அழைத்து உள்ளார் சூர்யா.

கமலும் செல்லவிருக்கிறார். ஆனால் கமல் இந்த விருந்துக்கு போவதற்கு முக்கிய காரணமே சூர்யாவை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் என்ற ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆகமொத்தம் கமல் ஸ்கெட்ச் யாருக்கு போடுகிறார் என்றே தெரியவில்லை.

Trending News