புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஜெயிலர் பட வசூலை தடுக்க போடும் ஸ்கெட்ச்.. உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா, கேளுங்க தளபதி

Rajini In Jailer: இரண்டு வருடங்களுக்கு முன் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தான் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அதனால் இப்படம் எப்படியாவது மக்களுக்கு பிடித்துப் போக வேண்டும் என்று மிகமுனைப்புடன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நடித்திருக்கிறார்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. அதில் ரஜினி மேடையில் பேசிய போது, எப்போதும் போல ஒரு குட்டிக் கதையை சொல்லி இருக்கிறார். அதில் காகம், பருந்து என உதாரணத்திற்கு சொன்னார். ஆனால் ரஜினி, காக்கா என்று விஜய்யை தான் சொல்லி இருக்கிறார் என்று மாறிவிட்டது.

Also read: இது என்ன ரஜினிக்கு வந்த சோதனை.. ஜெயிலர் படத்தால் சூப்பர் ஸ்டாரை தேடி வந்த பெரும் சிக்கல்

இதனால் செம கடுப்பில் விஜய் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அதுவும் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதால் இவருடைய ரசிகர்கள் இன்னும் அதிகமாகவே பாசத்தை கொட்டி வருகிறார்கள். இந்த சமயத்தில் ரஜினி பேசிய ஒரு வார்த்தை அவர்களை மிகவும் காயப்படுத்திருக்கிறது. இதனால் ரஜினி மீது அதிக கோபத்தில் இருக்கிறார்கள்.

அதற்காக ரஜினியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இவருடைய நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர் படத்தை ஓட விடாமல் எப்படியாவது ஃபெயிலியர் ஆக்க வேண்டும் என்று முடிவெடுத்து பல சதி வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் ரசிகர்கள் யாரும் ஜெயிலர் படத்தை பார்க்க கூடாது என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.

Also read: நின்னு விளையாடிய 6 கேரக்டர் ரோல்.. ரஜினி கதாபாத்திர பெயரை படமாக உருவாக்க வாசு போட்ட திட்டம்

அத்துடன் அவர்களுடைய குடும்பத்தையும் பார்க்க அனுமதி கொடுக்கக் கூடாது என்று மன்றம் சார்பாக பேசி முடிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் இப்படி செய்வது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. ஒருவேளை இவர்கள் முடிவு பண்ணின மாதிரியே செய்து வந்தால் கண்டிப்பாக ஜெயிலர் படம் வசூல் அளவில் மிகப்பெரிய சரிவை பார்க்கும்.

இப்படி விஜய்யின் ரசிகர்களின் ஸ்கெட்ச் போட்டு ஜெயிலர் படத்தை வசூல் அளவில் சரிவை ஏற்படுத்த வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள். இதெல்லாம் ரொம்பவே ஓவராக தான் இருக்கிறது. இது அனைத்தையும் பார்த்தும் கண்டும் காணாதபோல் தளபதி அமைதியாக இருப்பது சரி இல்லை. கொஞ்சம் இதையெல்லாம் பற்றி தெளிவாக தளபதி பேசினால் நன்றாக இருக்கும்.

Also read: லண்டனில் மாமியார் வீட்டு விருந்து முடித்தவுடன் விஜய் செய்யப் போகும் சம்பவம்.. ஆட்டம் காண போகும் அக்கட தேசம்

Trending News