Gossip: கடந்த சில வருடங்களாகவே அந்த நடிகைக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நடித்த ஒன்றிரண்டு படமும் பெரிய ரெஸ்பான்ஸ் பெறவில்லை.
இருந்தாலும் நடிகை பக்கத்து மாநிலத்திற்கு சென்று டேரா போட்டார். எப்படியாவது டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும் என பிளான் போட்டார்.
அதற்காக பணத்தை தண்ணீராக செலவு செய்து வாய்ப்பு தேடினார். ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான் எந்த நடிகரும் நடிகையை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
இதனால் சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி பழைய இடத்திற்கே வந்தார். தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார் நடிகை.
மாசக்கணக்கில் காத்திருந்து ஏமாந்த நடிகை
இதன் மூலம் பெரிய வாய்ப்புகளை தட்டி தூக்குவது தான் அவருடைய பிளானாம். ஏனென்றால் தெரிந்த நடிகர்களிடம் ஜாடை மாடையாக வாய்ப்பு கேட்டும் கூட அவருக்கு கிடைக்கவில்லையாம்.
இதனால் கடுப்பான நடிகை மங்கம்மா சபதம் போல் பழைய இடத்தை பிடித்தே தீருவேன் என தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் தினமும் நடிகை ட்ரெண்டிங்கில் வருவதற்கு கூட கணிசமான தொகையை செலவு செய்கிறாராம்.