வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கத்தியை கையில் எடுத்த மகன்.. ராதிகா 3வது புருஷன் தேட நேரம் வந்துடுச்சு

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகளின் பேர் ஆதரவுடன் ஒளிபரப்பாகி இத்தொடர் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது பாக்யா மற்றும் அவரது குடும்பத்தை பழிவாங்க ராதிகா பாக்யாவின் எதிர் வீட்டுக்கு குடிவந்துள்ளார்.

மேலும் பாக்யா முன் ராதிகாவுடன் கோபி ரொமான்ஸ் செய்து வருகிறார். இந்நிலையில் எதர்ச்சியாக காலையில் செழியன் வாக்கிங் சென்று வரும்போது கோபியை பார்க்கிறார். அப்போது மகனைப் பார்த்து நான் இங்க தான் இருக்க போறேன் என்று கோபி கூறுகிறார்.

Also Read :இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 7 பேர்.. சாந்தியை தொடர்ந்து வெளியேறும் அடுத்த நபர் இவர்தான்

இதைக் கேட்டு செழியன் அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் இனியா வந்து அம்மா கூப்பிடுவதாக கோபியை அழைத்துச் செல்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செழியன் வீட்டிற்கு வந்து ஜெனியிடம் புலம்புகிறார். பால்கனியில் இருந்து பார்க்கும்போது ராதிகா மற்றும் கோபி இருவரும் கொஞ்சிக் கொஞ்சி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் பாக்யா வீட்டில் எல்லோரும் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த இந்தச் சமயம் செழியன் கதறி அழுகிறார். அதைப் பார்த்த அனைவரும் பதறுகிறார்கள். உடனே பாட்டி உன் வேலையில் ஏதும் பிரச்சனையா, இல்ல ஜெனி கூட எதுவும் சண்டையா என்று கேட்கிறார்.

Also Read :10 லட்சத்தை தட்டி தூக்கிய தம்பி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு அடித்த ஜாக்பாட்

அதெல்லாம் இல்ல பாட்டி, அப்பா நம்ப எதிர்த்த வீட்டுக்கு குடுத்தனம் வந்திருக்கிறார் என்று செழியன் கூறுகிறார். இது எப்போ என்று பாட்டி கேட்க, காலையில் தான் அத்தை என்று பாக்யா சொல்கிறார். நான் காலையில கோலம் போடும்போது தான் அவங்க வந்தாங்க என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட ஆத்திரம் அடைந்த எழில் கையில் கத்தியை எடுக்கிறார். மேலும் எழிலுக்கு இருக்கும் கோபத்தை பார்த்தால் தனது அப்பாவை தீர்த்து கட்டும் முடிவில் இருக்கிறார் போல. இப்படியே போனால் அடுத்ததாக ராதிகா மூன்றாவது புருஷனை தான் தேட வேண்டும்.

Also Read :தினமும் பேப்பர், பால் பாக்கெட் வாங்குவதற்கு தான் லாயக்கு.. அசிங்கப்பட்டு போன புஷ்பா புருஷன்

Trending News