புதன்கிழமை, நவம்பர் 13, 2024

திரிஷாக்காக வரிந்து கட்டி வந்த சங்கம்.. உதயநிதிக்கு ஆதரவாகி விடுமோ? அச்சத்தில் வாய்மூடிய நடிகர்கள்

The South Indian Actors’ Association has lined up for Actress Trisha: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நலம் போற்றப்படும் என்று காது கிழிய மேடை ஏறி சத்தியம் செய்பவர்கள், ஆட்சிக்கு வரவில்லை என்றாலோ அதே பெண்ணியத்தை பயன்படுத்தி தங்கள் நலம் பேணுகின்றனர். இவ்வாறான வகையில் பெண்களை துச்சமென நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தக்க பாடம் புகட்டும் நேரம் வந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலில் எம்எல்ஏக்கள் பலர் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு நடந்த சம்பவங்கள் பற்றியும், நடக்காத சில சம்பவங்களை கோர்த்தும் தனக்கு ஆதாயம் ஏற்படும் வகையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றிய செயலாளர் ஏவி ராஜு பேட்டி கொடுத்தது பரபரப்பாகி வருகிறது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவையும், திரை துறையிலும் பொது வாழ்விலும் பங்கெடுத்த கருணாஸ் அவர்களையும் மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புபடுத்தி கேட்பதற்கு கூசும்படியான செய்திகள் மூலம் இவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார் ஏவி ராஜு.

Also read: திரிஷாவை போல் ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமை.. சேலம் பிரபலத்துக்கு எம்ஜிஆர் கொடுத்த விசேஷ விருந்து

இது பற்றி முதல் ஆளாக இயக்குனர் சேரன் தனது கண்டனத்தை பதிவு செய்த நிலையில் தற்போது விஷால் உட்பட தென்னிந்திய நடிகர் சங்கமும் முன்னணி நடிகர்கள் பலரும் திரிஷாவிற்கு ஆதரவாக போர்க்கரம் நீட்டி உள்ளனர்.

நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கூறும் போது, திரைத்துறை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பேசி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும் கேட்போரை கீழ்த்தரமாய் கருதியும் இவ்வாறு பேசுவது கண்டனத்துக்கு உரியது. பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக உபயோகப்படுத்தி விளையாடுவதை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இந்த பிரச்சனை தொடர்பாக சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் திரிஷாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றார்.

அரசியல்வாதிகளின் காழ்புணர்ச்சிக்காகவும் அரசியல் மோதலுக்காகவும் கலைஞர்கள் நசுக்கப்படுவது வாடிக்கையாக்கி உள்ளது. எதிர்க்கட்சி என்பதால் என்னவோ சகநடிகனாக கூட வாய் திறக்காமல் இருக்கிறார் உதயநிதி. நடிகர்கள் சிலரோ நாம்  இப்பிரச்சனைக்கு குரல் கொடுத்தால் அது ஆளும் கட்சியான உதயநிதிக்கு சாதகமாகி விடுமோ என்று பொறாமையில் பொங்கி உள்ளனர்.

Also read: ஏ கிரேடு நடிகர்களிடம் வாங்கும் கடன்.. அஜித் வார்த்தைய காப்பாற்றும் உதயநிதி

- Advertisement -spot_img

Trending News