செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

கோலாகலமாக தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7.. நாள் குறித்த விஜய் டிவி

Bigg Boss 7 : விஜய் டிவியின் அஸ்திரம் என்று சொன்னால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஏனென்றால் பிக் பாஸ் தொடங்கப்பட்டது என்றால் மற்ற தொலைக்காட்சிகளின் டிஆர்பி சரிவை சந்திக்கும். அதாவது ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் பிக் பாஸ் பெற்றிருப்பதால் விஜய் டிவியின் டிஆர்பி எகிற தொடங்கும்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்குவதற்கான தேதியை விஜய் டிவி லாக் செய்து வைத்திருக்கிறது. எப்போதுமே ஜூலை மாதத்திலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடும். ஆனால் கடந்த முறை காலதாமதமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

Also Read : குக் வித் கோமாளி பைனல் லிஸ்ட்.. மீண்டும் வேலையை காட்டிய விஜய் டிவி

அதேபோல் தான் இந்த வருடமும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. மேலும் இப்போதிலிருந்து ஏழாவது சீசனக்கான போட்டியாளர்களுக்கு விஜய் டிவி வலை வீசி வருகிறது. எப்போதுமே சர்ச்சையான போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள்.

அதன்படி இந்த சீசனிலும் பொது மக்களில் இருந்து இரண்டு நபர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள். அதில் சமீபத்தில் பஸ் ஓட்டுனர் ஷர்மிளா பணி நீக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமின்றி உலகநாயகன் கமல் அவருக்கு காரை பரிசாக வழங்கி இருந்தார்.

Also Read : பேர், புகழ் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் 5 பிரபலங்கள்.. கவினுக்கு மூன்று மாதம் அடைக்கலம் தந்த விஜய் டிவி

இதன் காரணமாக ஷர்மிளா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் விஜய் டிவியிலிருந்து இரண்டு மூன்று நபர்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள். மேலும் மாடலிங் மற்றும் வெள்ளிதிரையிலிருந்து சில நபர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இவ்வாறு கோலாகலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. கடந்த ஆறு சீசன்களைப் போல இந்த சீசனையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இந்த முறை அவருக்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

Also Read : ராகவா லாரன்சுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி பாலா.. 5 வருட கனவை நனவாக்கிய புகைப்படம்

Trending News