புதன்கிழமை, ஜனவரி 15, 2025

AI படிக்க ஆசையா, எப்படி ஆரம்பிக்கிறது தெரிலையா?. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்

AI training: காலத்திற்கு ஏத்த மாதிரி நம்மள மாத்திக்கிட்டே இருக்கணும். அப்போதான் நினைச்சு நிற்க முடியும். ஆபீஸ்ல நான் எவ்வளவோ வேலை செய்றேன் ஆனா எனக்கான மதிப்பு கிடைக்கிறது இல்லை சில பேருக்கு தோணும். இன்னைக்கு வந்தவன் என்னைவிட பத்தாயிரம் ரூபாய் சம்பளம் அதிகமா வாங்குகிறான் அப்படின்னு தோணும்.

ஆனா அவன் நம்மள விட அதிகமான டெக்னாலஜியை தெரிஞ்சு வச்சுக்கிட்டு இருக்கா அது நம்ம ஒத்துக்கிட்டு தான் ஆகணும். டெக்னாலஜியை கத்துகிறது மூலமாக தான் இனி ஒவ்வொரு இடத்திலும் நாம் ஜொலிக்க முடியும்.

காலத்திற்கு ஏற்ப இந்த டெக்னாலஜி முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் AI. கடந்த ஆறு மாத காலமாக இந்த வார்த்தையை நாம் அதிகமாக கேட்டிருப்போம். நம்மில் பலருக்கு இந்த துறையில் நுழைவதற்கு ஆசை இருக்கும்.

ஆனால் அதை எப்படி ஆரம்பிக்கிறது எங்க இருந்து ஆரம்பிக்கிறது என்று தெரியாமல் புலம்பிட்டு இருப்போம். அப்படி இருக்கிறவங்க கண்டிப்பா இந்த செய்தியை முழுசா படிச்சிருங்க. கூகுள் நடத்தும் ஏ ஐ பயிற்சி வகுப்பை எல்லோருமே படித்து விடலாம். அதற்கு பெருசாக தொழில்நுட்ப அறிவு எல்லாம் தேவை கிடையாது.

இரண்டு விதமான பயிற்சிகள்

கூகுள்: கூகுள் கிளவுட் நடத்தும் பயிற்சி வகுப்பு இது. இதில் பயிற்சி பெற பெரிதாக தொழில்நுட்ப அறிவு எல்லாம் தேவை கிடையாது. கிட்டத்தட்ட 45 நிமிடத்தில் AI தொழில்நுட்பம் பற்றி டெம்ப்லேட் மூலம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஒரு ஒரு பயிற்சியையும் நாம் முடிக்கும் பொழுது நமக்கு பேட்ச் கொடுக்கப்படும். நம்முடைய ப்ரொபைல் போய் பார்ப்பவர்களுக்கு நாம் எவ்வளவு பேட்சுகள் வாங்கி இருக்கிறோம் என முகப்பிலேயே தெரிந்துவிடும். பயிற்சி கொடுத்து அதன் இறுதியில் நமக்கான தேர்வையும் வைத்து, பேட்ச் கொடுத்து விடுகிறார்கள்.

மைக்ரோசாஃப்ட்: இந்த பயிற்சியை பெற கண்டிப்பாக பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அப்போதுதான் இதன் நுணுக்கங்கள் புரியும். அறிமுக பாடத்தில் இருந்து ஆரம்பித்து கிட்டத்தட்ட 18 பாடங்கள் இதில் இருக்கிறது. பத்திலிருந்து 15 நாட்கள் இந்த பயிற்சியை பெற ஆகும். சிலருக்கு ஒரு மாதம் கூட ஆகலாம். ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் செலவு செய்து இந்த பாடத்தை படிக்க வேண்டும்.

யூடியூப்: பாடமெல்லாம் படிப்பதற்கு எங்களுக்கு ஏது நேரம் என்று நினைப்பவர்களுக்கும் வேறு வழி இருக்கிறது. AIanytime என்னும் யூட்யூப் பக்கத்தில் இந்த தொழில்நுட்பத்தை பற்றி நிறைய விஷயங்கள் பகிரப்பட்டு இருக்கிறது. நேரம் இருக்கும் போது இந்த youtube வீடியோக்களை பார்த்தாலே இந்த தொழில்நுட்பத்தை பற்றி கற்றுக் கொள்ளலாம்.

Trending News