செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

கங்குவா படத்தில் 5 குலங்களின் கதை.. இத்தனை வருஷ உழைப்பு இருக்கு, மதன் கார்க்கி ஓபன் டாக்

தமிழ் சினிமாவின் பெருமைகுரிய படமாக கங்குவா இருக்கும் என இப்படம் உருவாகி வரும் காலக்கட்டத்திலேயே பலரும் கூறினர். அதன்படி சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி, இன்று உலகம் முழுவதும் இப்படம் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கார்த்தி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளது.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து இந்தியா முழுவதும் இப்படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபட்டனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிலும் புரமோசனை படக்குழு மேற்கொண்டனர். இன்று நவம்பர் 14 ஆம் தேதி 38 மொழிகளில், 11,500 க்கும் மேற்ற திரையரங்குகளில் இப்படம் ரிலீஸாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இப்படத்திற்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சூர்யா ரசிகர்கள் இப்படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதாகவும், படம் நன்றாக வந்திருப்பதாக கருத்துகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்தும் கங்குவா படத்தை பார்த்து பாராட்டி வருவதாக சிவா தெரிவித்துள்ளார்.

இப்படம் குறித்து வசன கர்த்தா மதன் கார்க்கி கூறியதாவது:

பாகுபலி படத்திற்கு வசனம் எழுதிய வசன கர்த்தா மதன் கார்க்கிதான் இப்படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார் என்பதால் இதுகுறித்து மீடியாவுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இப்படத்திற்காக சிவாவுடன் இணைந்து நான் பணியாற்றினேன். அதற்கு முன் அவர் அப்படி வசன கர்த்தாவுடன் இணைந்துப்பணியாற்றவில்லை என்று கூறி இருவரும் இணைந்து இதில் பணியாற்றலாம் என்றார். நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன்.

அவர்தான் ஐந்து குலங்களுக்கு நடுவில் நடக்கும் கதையாக கங்குவா படக் கதையை மாற்றலாம் என்றார். இதற்காக அம்மக்களின் கலாச்சாரம் உள்ளிட்டவற்றையும் தெரிந்துகொண்டோம். இதற்காக அவர்கள் பேசும் மொழியில் இருந்து மாற்றினால் எப்படியிருக்குமென சிந்தித்து, வசனம் எழுதக் கூறும்போது குறிப்பு எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்காக வார்த்தைகள் அனைத்தையும் சேர்த்து வைத்து ஒரு பைபிள் போன்று வைத்திருந்தேன். ஒவ்வொரு காட்சியும் நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று அதன் உதவியால் வசனம் எழுதினேன். இப்படம் 2 ஆண்டுகளாக நடந்தது. இப்படத்திற்கு வசனம் எழுதுவது எனக்குச் சவாலாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்தில் அமைந்த வசனங்கள் எல்லோராலும் வெகுவாகப் பாராட்டப்பட்ட நிலையில், கங்குவா பட டீசர், டிரெயிலரிலேயே அழகான தமிழ் உச்சரிப்பில் அதன் வசனங்களும் கூர்மையாக இருந்ததால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இன்று வெளியான இப்படத்தைப் பார்த்த விமர்சகர்களும் இப்படமும் அதன் காட்சியமைப்பும் வசனங்களும் நன்றாக இருப்பதாகக் கூறி வருகின்றனர்.

Trending News