திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாரதிராஜா, பாலா போட்டி போட்ட கதை.. மொக்க கூட்டணியில் சசிகுமாருக்கு வைக்கப்போகும் ஆப்பு

திரை உலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. ஆனாலும் அவர் விடாமுயற்சியுடன் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் பகைவனுக்கு அருள்வாய், நந்தன் ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நாவலிலும் நடிக்க இருக்கிறார். இப்போது எல்லாம் தமிழ் சினிமாவில் நாவல்களை கதையாக எடுக்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் என்ற கதையை மணிரத்தினம் பிரம்மாண்ட திரைப்படமாக இயக்கி அதில் வெற்றியும் பெற்றிருந்தார்.

Also read: ஜிபி முத்துவுக்கு கோரிக்கை வைத்த சசிகுமார்.. பிக்பாஸ்க்கு பின் இருக்கும் முக்கிய பொறுப்பு

அதை பின்பற்றி தற்போது பலரும் பிரபலமாக பேசப்பட்ட நாவல்களுக்கு திரை வடிவம் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் நாவலான குற்ற பரம்பரையை இப்போது திரைப்படமாக எடுக்க இருக்கின்றனர். ஏற்கனவே இந்த கதையை படமாக எடுக்க பாரதிராஜா, பாலா இருவருக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது.

ஆனால் அதன் பிறகு இருவருமே இதை படமாக்க முயலவில்லை. அதை தொடர்ந்து இப்போது இந்த நாவல் படமாகவோ அல்லது வெப் தொடராகவோ மாற இருக்கிறது. அதில் தான் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அவருடன் விஜயகாந்தின் மகனும் நடிக்க இருக்கிறார். தற்போது அதற்கான வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Also read: அசத்தல் கம்பேக் கொடுத்த சசிகுமார்.. காரி படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

ஆனால் இந்த கதையை இப்போது யார் இயக்க இருக்கிறார்கள் என்ற தகவல் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இது போன்ற ஒரு அற்புதமான படைப்பை ராஜமவுலி போன்ற பெரிய இயக்குனர்கள் இயக்கினால் தான் அந்த கதைக்கான திரை வடிவம் மாறாமல் கிடைக்கும். ஆனால் வேறு இயக்குனர்கள் கையில் இந்த கதை கிடைத்தால் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்ற சந்தேகம் இப்போது பலருக்கும் இருக்கிறது.

அந்த வகையில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி இந்த நாவலை இயக்கும் உரிமையை யாருக்கு கொடுத்திருக்கிறார் என்பதை அறிய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு வெற்றிக்காக பாடுபட்டு வரும் சசிகுமாருக்கு இந்த கதையாவது அடையாளத்தை கொடுக்குமா அல்லது வழக்கம் போல இது மொக்கை கூட்டணியாக மாறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: தோல்வி பயத்தால் இந்த இயக்குனர் வேண்டாம் என ஒதுங்கி சிவகார்த்திகேயன்.. வசமாக மாட்டிய சசிகுமார்

Trending News