புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பலரையும் தெறிக்க ஓடவிட்ட ஹச் வினோத்தின் கதை..  சர்ச்சையை கிளப்பவே ஓகே சொன்ன தளபதி

The story of H Vinoth, which has left many people in awe and thalapathy say ok: பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள்,முன்னணி நடிகர்கள் இவை இரண்டும் சேர்ந்தாலே வசூலில் பிரம்மாண்ட வெற்றி என்று சினிமாவில் சொல்லப்படாத  விதி இருக்கையில்.

குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் தரமான திரைக்கதைக்கும் மக்களிடையே வரவேற்பு உண்டு என்பதை நிரூபித்தார் இயக்குனர்  ஹச் வினோத்.

சினிமாவில்  தடம் பதிப்பதற்காக பல போராட்டங்களை  சந்தித்தவருக்கு வழிகாட்டியாகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர்தான் மனோபாலா.

காதல், ஆக்சன் மட்டுமே சினிமா என்று எதிர்பார்த்து வரும் ரசிகர்களை  சமூகத்தில் நடக்கும் குற்றங்களை சுவாரசியமாக கூறி அனைவரையும் சபாஷ் போட வைத்த திரைப்படம் தான் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை.

பலரிடமும் சதுரங்க வேட்டை கதை கூறிய வினோத்திற்கு இறுதியாக கை கொடுத்தவர் தான் நடராஜ். நடராஜருக்கும் சதுரங்க வேட்டை அவரது சினிமா கேரியரில் மாபெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

முதல் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த வினோத் பின் ஒரு தரமான அரசியல் கதையை மனோபாலாவிடம் கூற, தயாரிப்பாளராக மனோபாலாவும் அந்த கதையை பல நடிகர்களையும் கேட்க சொல்லி சிபாரிசு செய்தாராம்.

அதாவது சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தை போல் ஆளும் வர்க்கத்தை சீண்டி, அரசாங்க  இயந்திரத்தை சீர் செய்வது போல தரமான அரசியல் கேங்ஸ்டர் ஸ்டோரியாம்.

கதை கேட்ட பல நடிகர்களும் ஏற்கனவே படத்தின் ரிலீசின் போது அரசியல் கட்சிகளால் தொல்லைகளை சந்திக்க வேண்டி உள்ளது. இது போன்ற கதை என்றால் கூடுதல் தொல்லை என்று விலகி ஓடிவிட்டார்களாம்.

அரசியல் கதைக்கு ஓகே சொன்ன தளபதி

 விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

தமிழக வெற்றி கழகம் எனது அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் கடைசியாக ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக ஈடுபட போகிறார்.

இந்த நேரத்தில் தான் முதல்வன் படம் போல் பாலிடெக்சை புரட்டி போடக்கூடிய ஸ்டோரி என்றதும் சுவாரஸ்யமாக கதை கேட்டாராம் தளபதி.

கேட்ட மாத்திரத்தில் பிடித்துப் போகவே சர்ச்சைகளை சட்டை செய்யாமல் உடனடியாக ஓகே சொல்லி விட்டாராம். தளபதியின் அரசியல் பயணத்திற்கு பக்க பலமாக இத்திரைப்படம் இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார் விஜய்.

தெலுங்கின் DVV என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பு  பணிகளை மேற்கொள்ள ஹச் வினோத்தின் அரசியல் சாணக்கிய தந்திரத்துடன் உருவாக உள்ளது விஜய் 69 .

இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் படப்பிடிப்பை முடித்து 2025 ரிலீஸ் செய்வது என முடிவு செய்துள்ளனர் பட குழுவினர்.

Trending News