வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தாறுமாறாக உருவாகும் தளபதி 68 கதை.. விஜய்யின் அரசியலுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் வெங்கட் பிரபு

Actor Vijay: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆடியோ லாஞ்ச் காக வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆடியோ லான்ச் மூலம் படத்தை வெற்றியின் எல்லைக்கு கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்று படக்குழு உத்வேகமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

இதன் விளைவாக விஜய்யும் தமிழ்நாட்டு ரசிகர்களை குளிர வைப்பதற்காக சென்னையிலேயே ஆடியோ லான்ச் வைக்கலாம் என்று கூறியிருக்கிறார். எப்படியும் லோகேஷ் கதை மற்றும் விஜய் நடிப்பு கண்டிப்பாக வெற்றி அடைய தான் செய்யும். அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார்.

Also read: அடுத்தடுத்து 4 பட தோல்வியால் லோகேஷ் இடம் சரணடைந்த மாஸ் ஹீரோ.. விட்டுக் கொடுத்த ரோல்க்ஸ் சூர்யா

அதற்கான கதை விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அனிருத்திற்கு பதிலாக யுவன் இசையமைக்க போகிறார். அத்துடன் இப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பிறகு பல வதந்திகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெங்கட் பிரபுவை கூப்பிட்டு வார்னிங் கொடுத்தார்.

அதிலிருந்து இப்படத்திற்கான எந்த ஒரு விஷயங்களும் சஸ்பென்ஸ் ஆகவே நகர்ந்து வருகிறது. இந்த சூழலில் இப்பொழுது இப்படத்திற்கான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் நடிகராக எந்த அளவிற்கு ஆர்வத்தை காட்டி வருகிறாரோ, அதே மாதிரி அரசியலிலும் பிரவேசிக்க உத்வேகமாக செயல்பட்டு வருகிறார். அதற்கு அஸ்திவாரமாக தளபதி 68 படத்தை முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்கப் போகிறது.

Also read: விஜய் செய்தது போல் ரஜினியால் செய்ய முடியுமா.? செக் வைத்து சவால் விட்ட பிரபலம்

முக்கியமாக இந்த படத்தில் இரண்டு கேரக்டரில் விஜய் நடிப்பதாக தகவல் வந்துள்ளன. ஆனால் அவ்வளவு ஈசியாக விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது 68 படத்தில் என்ன காரணத்திற்காக ஒத்துக் கொண்டார் என்பது மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து லியோ படம் ரிலீசுக்கு பிறகு தளபதி 68 படத்திற்கான ஒவ்வொரு விஷயங்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் விஜய்யின் அரசியலுக்கு தகுந்தார் போல் கதைகளை மாற்றி அமைத்து எடுக்கப் போகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அந்த வகையில் இப்படம் கண்டிப்பாக தாறுமாறாக வெற்றியை கொடுக்கப் போகிறது.

Also read: கமல், விஜய் தான் எங்களை காப்பாத்தினாங்க.. ரஜினி என்னத்த கிழிச்சாரு? எப்போதுமே உலக நாயகன் பெஸ்ட்!

Trending News