திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிலர் படத்தின் கதை இதுதான்.. மீண்டும் கேலிக்கூத்துக்கு உள்ளான நெல்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள படம் தலைவர் 169. இப்படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நெல்சன் கடைசியாக விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் இணையத்தில் கேலிக்கூத்துக்கு உள்ளானது. இதனால் பீஸ்ட் படத்தில் செய்த தவறை தலைவர் 169 படத்தில் நெல்சன் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானவுடன் காப்பி அடிப்பதில் அட்லியை மிஞ்சுவிடுவார் நெல்சன் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தற்போது ஜெயிலர் படத்தின் கதை இதுதான் என ஒரு செய்தி உலா வருகிறது. அதாவது விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பு இதுதான் விக்ரம் படத்தின் கதை என்று ஒரு கதை இணையத்தில் வெளியாகியிருந்தது. சிறையில் இருக்கும் ஒரு பெரிய தீவிரவாதியை தப்பிக்க வைக்க ஜெயிலுக்குள் இன்னொருவர் வருவது போன்ற கதை அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் விக்ரம் படம் வெளியாகி வேறு விதமான கதை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இணையத்தில் விக்ரம் படம் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் அதேபோல் சிறையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க வெளியிலிருந்து ஒரு நபர் வருகிறார் என்றும் அவரை தடுக்க ஜெயிலர் போராடுவது போல் கதை அமைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது அந்த தீவிரவாதி கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்றும், ஜெயிலராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் உலாவி வருகிறது. இதனால் விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பு இணையத்தில் வெளியான கட்டுக்கதையை நெல்சன் படமாக இயக்கயுள்ளார் என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆனால் படம் வெளியானால் மட்டுமே ஜெயிலர் படத்தின் கதை ரசிகர்களுக்கு தெரியவரும். மேலும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஓரளவு ஆதரவு பெற்று வந்தாலும், ஒருபக்கம் நெல்சனை வறுத்தெடுத்த வருகிறார்கள்.

Trending News