சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

கமலுக்கு மிஷ்கின் சொன்ன கதை.. அவமானத்தால் நின்று போன படம்.!

The story told by Mishkin to Kamal and The film stopped because of shame: தமிழ் சினிமாவில் தனது படைப்பில் சமரசம் செய்யாது முரட்டு தேகத்துடன் மிரட்டும் மிஷ்கின், இயக்குனராக களம் இறங்கி, பின் நடிகராக தடம்பதித்து மீண்டும் இயக்குனராக கம்பேக் கொடுக்க உள்ளார்.

இவர் இயக்கிய முதல் திரைப்படம் நரேனின் சித்திரம் பேசுதடி, வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெறாவிட்டாலும் நல்ல விமர்சனத்தையே பெற்றது.

இதன் தாக்கத்தால் தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா போன்ற படங்களை இயக்கினார் மிஷ்கின்.

2010ல் வெளிவந்த நந்தலாலா திரைப்படத்தில் எந்த ஒரு பாடல்களோ,ஆக்சன்களோ இல்லாமல் இரு வேறு காலகட்டங்களில் ஒரு தாயை தேடும் மகன்களின் பாசப் போராட்டமாக அமைந்தது நந்தலாலா.

நந்தலாலா படம் மூலம் மிஷிகினுக்கு சான்ஸ் கொடுத்த கமல்

முன்னணி நடிகர்கள் பலரை நடிக்க வைக்க போராடி எவரும்  சம்மதிக்காததால், நந்தலாலா கதையில் எந்த ஒரு சமரசமும் செய்யாமல் தானே நடித்தார் மிஷ்கின்.

நந்தலாலா படத்தை பார்த்த கமலஹாசன் படத்தின் மீதான  ஈர்ப்பால் மிஷ்கினை அழைத்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று கூறியுள்ளார்.

உலக நாயகனை இயக்கப் போகிறோம் என்று ஆர்வத்தில் மூன்று கதையை ரெடி பண்ணி கமலிடம் கூற, அதில் ஒரு கதையை ஓகே செய்தார் உலகநாயகன்.

இந்த கதை வரலாற்று பின்னணி கொண்ட புத்தரின் நிகழ்வாக அவருடைய பல்லை வைத்து பின்னப்படும் கதையாக இருந்தது.

40 நாட்கள் கதை விவாதம் நடந்த நிலையில், கதையில் பல கரெக்ஷன்களை கூறியுள்ளார் கமல். கமல் கூறுவதை இறுதிவரை பொறுமையாக கேட்டுக் கொண்ட மிஷ்கின்,

எவ்வளவு பெரிய நடிகரானாலும் பரவாயில்லை என் கதையில் எந்த ஒரு சமரசமும் செய்ய மாட்டேன் என்று துணிச்சலாக கூறி கமல் தந்த வாய்ப்பை மறுத்துவிட்டு வந்து விட்டாராம்.

இது நடந்து முடிந்து சில நாட்கள் கழித்து மீண்டும் கமலிடமிருந்து வேறு கதை பண்ணலமா என்று போன் வரவே ஒரு பெரிய கும்பிடு போட்டு ஒதுங்கிக் கொண்டார் மிஷ்கின்.

பல தலையீடுகள் குறுக்கீடுகளாக வர, இயக்குனர் தன்னையே தொலைத்து விடுவதாக உணர்ந்தார். மிஷ்கின் மற்றும் கமல் இணைய இருந்த படம் கதை விவாதத்துடன் முடிவடைந்தது.

இந்த நிகழ்வுகள் அரங்கேறிய போது மிஷ்கின் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்த போதும் தனது படைப்பில் பிறரின் தலையீடு இருக்கக் கூடாது என்ற நினைப்பில் வலிய வந்த அதிர்ஷ்ட தேவதையே தட்டி விட்டுப் போனார் இந்த தலைமகன்.

 

- Advertisement -spot_img

Trending News