புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாலையாவே ஓவர் டேக் பண்ணிய ஸ்டைலிஷ் ஹீரோ.. தனுஷ் சூர்யாவை போல விருதை வாங்கிய ராஜ்

The stylish hero who was overtaken by Balayya: சில ஹீரோக்கள் எப்படி நடித்தாலும் அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் அளவிற்கு ரசிகர்கள் எக்கச்சக்கமானவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் உடலை வருத்திக்கொண்டு நடித்தால் தான் ரசிகர்களின் ஆதரவுடன் சேர்ந்து விருது வாங்கும் அளவிற்கு பெயரும் புகழும் கிடைக்கும்.

இந்த லிஸ்டில் இங்கே இருக்கும் பல நடிகர்களை சொல்லலாம். அதில் தனுஷ், சூர்யா, கமல், விக்ரம் மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற சில ஹீரோக்கள் நேஷனல் விருது வாங்கி குவித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் நடிப்புடன் சேர்ந்து அவர்கள் எடுத்துக் கொண்ட டெடிகேஷன் தான்.

அதே மாதிரி தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களாக எத்தனையோ பேர் இருந்தாலும் பாலையாவின் நடிப்புக்கு இன்னும் வரை ரசிகர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 63 வயதாகியும் இப்பொழுது வரை இளம் ஹீரோ பண்ணும் அளவிற்கு ஆக்சன் மற்றும் ரொமான்ஸ்களை தெறிக்க விடுகிறார்.

விருதை தட்டி தூக்கிய ஸ்டைலிஷ் ஹீரோ

ஆனால் இப்படிப்பட்ட பாலையாவே ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு ஸ்டைலிஷ் ஹீரோவாக ரசிகர்களை ஒவ்வொரு படத்தின் மூலமும் கவர்ந்து வருகிறார்.

அவர் வேறு யாருமில்லை புஷ்பராஜ் என்ற கேரக்டரில் புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனா தான். இந்த படத்தில் இவருடைய நடிப்பிற்காக தேசிய திரைப்படம் விருதை வென்ற முதல் டோலிவுட் நடிகர் என்ற வரலாற்றை படைத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி இருக்கிறது. இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக அட்லியுடன் கூட்டணி வைத்து கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூலை குவிக்க வேண்டும் என்று மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.

Trending News