மிஸ்டர் பீன்-க்கு இருந்த குறைபாடு.. தடுமாற்றங்களை தகர்த்து புகழின் உச்சத்தை தொட்டது எப்படி தெரியுமா.?

ரோவன் அட்கின்சன் என்று சொன்னால் அவ்வளவு எளிதாக அவர் யார், எந்த துறையில் இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவரை அறிந்த பலருக்கும் இது தான் அவரது உண்மை பெயர் என்பது கூட அறியாமல் அவரை ரசித்து பார்த்திருக்க கூடும். அதே நேரம் மிஸ்டர் பீன் என்று கூறினால் போதும் ஒவ்வொரு நபர் முகத்திலும் புன்முறுவல் பூக்கும். அந்த அளவிற்கு அவர் 90s கிட்ஸ்களுக்கு நன்கு பரிச்சயம். ஆனால் அவரது வாழ்க்கை இவ்வளவு எளிதாக அமையவில்லை. அவர் கட்டமைத்தார். சற்றே விரிவாக பார்க்கலாம்.

ரோவன் எனப்படும் மிஸ்டர் பீன் கன்செட், இங்கிலாந்தில் 1955 ஆம் ஆண்டு பிறந்தார். 4 மகன்கள் கொண்ட விவசாய குடும்பத்தின் கடைக்குட்டி. சிறுவயதில் அவர் இங்கிலாந்தின் பின்னாள் பிரதமர் டோனி பிளேர் அவர்களுடன் பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பில் அதிக நாட்டம் கொண்டவர் ரோவன். அவர் ஓர் என்ஜினீயரிங் பட்டதாரி. நம்ம ஊர் பொறியியல் போல அல்ல நண்பர்களே!

ரோவன் அவர்களின் இளமைக்காலம் இனிமையானது என்று சொல்ல முடியாது. பணம் அவரது பிரச்சினை அல்ல. அவரது மிகப்பெரும் பிரச்சினை திக்குவாய். சிறு வயதில் இருந்தே அவருக்கு திக்குவாய் இருந்தது. அதன் காரணமாக பலரின் கிண்டல் கேலிக்கு ஆளானார் அவர். அதனால் அவர் எப்போதும் தனிமையிலும் ஒரு வித தாழ்வு மனப்பான்மை கொண்டே வாழ்ந்துள்ளார்.

ஆனாலும் படிப்பில் கெட்டி, இருந்தாலும் அவருக்குள் எப்போதும் ஒரு இளகிய மனமும், நகைச்சுவை குணமும் இருந்தது. கல்லூரி வரை நகைச்சுவையை கொண்டு வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் எண்ணம் இருந்ததில்லை. படிப்பை முடித்த பிறகே அவர் அத்திசையில் பயணிக்கத் தொடங்கினார். நம்ம மிஸ்டர் பீன் ரொம்பவும் மெனக்கெட்டு இந்த பின்னடைவுகளில் இருந்து வரவில்லை.

இதையும் அவர் மிக சாதாரணமாக கடந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அவரிடம் ‘இந்த குறைப்பாட்டில் இருந்து எப்படி நீங்கள் மீண்டிர்கள்? ‘ என்ற கேள்விகளுக்கு அவர் எளிமையாக பதில் அளித்தார். ‘ அது என்னவோ தெரியவில்லை, நான் வேறு ஒரு கதாபாத்திரமாக நடிக்கும்போது இந்த தடுமாற்றம் வருவதே இல்லை ‘ என்று விளக்கமளித்தார்.

மேலும் தனது மிஸ்டர் பீன் கதாபாத்திரத்திற்கு அதிகம் உடல் மொழியாலேயே வடிவம் கொடுத்தார். மிகக்குறைவான வசங்கள் தான் அதில் இடம்பெற்றிருக்கும். ரோவன் அட்கின்சன் மிஸ்டர் பீன் அணிமெட்டட் கதாபாத்திரத்திற்கும் வடிவம் கொடுக்க உதவினார். அதோடு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை கேலி செய்யும் விதத்தில் ஜானி இங்கிலீஷ் என்னும் கதாபாத்திரத்தில் அதே பெயர் கொண்ட படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

அந்த கதாபாத்திரங்கள் பீன் பாத்திரத்தின் நகல் என்று கூறும் அளவுக்கு இருந்தது மிஸ்டர் பீன் தொடருக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். ரோவன் அட்கின்சன் என்னும் மிஸ்டர் பீன், தடைகளை தாண்டி முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரின் இன்ஸ்பிரேசன் என்று அடித்து சொல்லலாம்.