ஆல் ரவுண்டராக இருக்கும் இளையராஜாவின் வாரிசு.. விரைவில் கொடுக்கப் போகும் புது அவதாரம்

தமிழ் சினிமாவை பல வருடங்களாக தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் தான் இளையராஜா. தன்னுடைய மெல்லிசை பாடல்களால் ரசிகர்களை கவர்ந்த இவர் இப்போதைய இளம் இசையமைப்பாளர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார். இவரைத் தொடர்ந்து இவருடைய வாரிசுகளும் இசையில் கலக்கி வருகின்றனர்.

அந்த வகையில் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி ஆகிய பிள்ளைகள் இருக்கின்றனர். மூவருமே இசைத்துறையில் இருந்தாலும் மற்றவர்களை காட்டிலும் யுவன் சங்கர் ராஜாவுக்கு தான் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. கடந்த 25 வருடங்களாக இசைத்துறையில் இருக்கும் இவர் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

Also read: இளையராஜாவை புறக்கணிக்கும் தமிழ் மக்கள்.. பதவிக்காக இப்படியா பண்றது.!

அப்பா 8 அடி என்றால் இவர் 32 அடி பாய்பவராக இருக்கிறார். அந்த வகையில் அப்பாவை மிஞ்சும் அளவுக்கு இவர் இசையில் பல சாதனைகள் புரிந்திருக்கிறார். தற்போது இவர் 25 வருடங்கள் முடிவு பெற்றதை கொண்டாடும் வகையில் பல கச்சேரிகள் நடத்தி வருகிறார். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இவருடைய இசை கச்சேரிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இசையை தாண்டி இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை இவர் தயாரித்திருந்தார். பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் லாபம் பார்த்தது.

Also read: தெலுங்குக்கு அப்பிட்டான இளையராஜாவின் குடும்பம்.. மோத விட்டு வேடிக்கை பார்க்கும் வெங்கட் பிரபு

அதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாமனிதன் திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். இப்படி இசை மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் ஈடுபாடு காட்டி வரும் யுவன் சங்கர் ராஜா விரைவில் ஒரு புது அவதாரம் எடுக்க இருக்கிறார். நிச்சயம் இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கும். அதாவது இசையால் அனைவரையும் கட்டி போட்ட யுவன் சங்கர் ராஜா விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதன் அறிவிப்பு வெளிவர இருக்கிறது. இளையராஜா இசையில் மட்டுமே தனித்துவம் மிக்கவராக பல சாதனைகள் படைத்திருக்கிறார். ஆனால் அவரின் வாரிசு இப்படி ஆல் ரவுண்டராக எல்லா துறைகளிலும் ஒரு கை பார்த்து வருவது பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது. அவரின் இந்த புது அவதாரத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also read: டாப் இயக்குனராக வந்திருக்க வேண்டிய பிரபலம்.. இளையராஜாவால் பறிபோன 13 பட வாய்ப்புகள்