செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

ரஜினி பெயரை கெடுக்க வந்த வாரிசு.. தெரியாமல் மாட்டிக் கொண்ட சூப்பர் ஸ்டார்

கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு பல டாப் நடிகர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது மிகப்பெரிய தகுதியாகும். இதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தற்போது வாக்குவாதங்கள் தொடங்கி விட்டது.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வாரிசு ஒருவர் பல அட்டூழியம் செய்து வருகிறாராம். அதிலிருந்து எப்படி மீள்வது என்று சூப்பர் ஸ்டார் மட்டுமின்றி படக்குழுவினரே செய்வதறியாமல் முழித்து வருகிறார்களாம்.

Also Read : கமலின் வெற்றி பார்முலாவை கையில் எடுக்கும் ரஜினி.. ரோலக்ஸ் செய்யப் போகும் சம்பவம்

அதாவது ரஜினியின் மூத்த வாரிசான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால்சலாம் என்ற படத்தை எடுத்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த படத்தில் ரஜினி நடிப்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில் அதன் பின்பு கேமியோ தோற்றத்தில் நடிப்பதாக ஒத்துக் கொண்டார்.

இந்நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினி நீண்ட தாடியுடன் தீவிரவாதி கெட்டப்பில் உள்ளது போல போட்டோக்கள் ஏற்கனவே வெளியானது. மேலும் இதில் ரஜினியை பாடாய்படுத்தி வருகிறாராம் ஐஸ்வர்யா. அதுமட்டுமின்றி ஏதோ பத்து, பதினைந்து படங்கள் ஹிட் கொடுத்தது போல நடந்து கொள்கிறாராம்.

Also Read : ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஹீரோயின்.. 46 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்

ஏனென்றால் சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற அந்தஸ்தை வைத்து இப்படி நடந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி லால் சலாம் படத்தில் காஸ்டியூம் டிசைனரை தற்போது வெளியேற்றிவிட்டாராம். மேலும் தனக்கு பிடிக்காத ஒவ்வொருவரையும் லால் சலாம் படத்திலிருந்து தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி வெளியேற்றி வருகிறாராம்.

இவரது ஆட்டிட்யூட் சுத்தமாக யாருக்கும் பிடிக்கவில்லையாம். சொல்ல போனால் லால் சலாம் படத்தில் இருந்து விஷ்ணு விஷாலையே கழட்டி விட்டாலும் அது ஆச்சரியம் இல்லை என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. ரஜினிக்கு இருக்கும் உயரிய பேரை அவரது வாரிசு மோசமாக்கி வருகிறது.

Also Read : 18 வருடத்திற்கு பின் திரையில் மோதிக் கொள்ளும் ரஜினி, கமல்.. பொன்னியின் செல்வனால் ஏற்பட்ட மோதல்

Trending News