புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்

பல வருடங்களாக சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சன் டிவி தரமான நிகழ்ச்சிகள், சீரியல்கள் மூலம் ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எத்தனையோ புதுப்புது சேனல்கள் வந்தாலும் சன் டிவிக்கு ஈடு இணை கிடையாது. அந்த அளவுக்கு சன் டிவி மக்கள் மனதில் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்போது பல சேனல்களும் நல்ல நல்ல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக இருந்தது சன் டிவி தான். அந்த வகையில் இதில் ஒளிபரப்பான நிலா என்னும் சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் பவித்ரா. ஆங்கராக இருந்த அவர் சவுத் இந்தியா போட்டியிலும் பங்கு பெற்று வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

Also read: இவ்வளவு வீராப்பு எங்கிருந்து வந்தது, ஈஸ்வரியின் எதிர்நீச்சல் ஆரம்பம்.. வெறியேறிய குணசேகரன்

தற்போது வணக்கம் தமிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவர் நடிகையாகவும் மாறி இருக்கிறார். சீரியலில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக வரும் இவரின் சோஷியல் மீடியாவை பார்த்தால் பலருக்கும் தலையை சுற்றிவிடும். அந்த அளவுக்கு இவர் கிளாமர் குயின் போன்று எக்கச்சக்கமான கவர்ச்சி போட்டோக்களை இறக்கி வருகிறார்.

சமீபகாலமாகவே சின்னத்திரை ஹீரோயின்களுக்கு என்னதான் ஆச்சு என்று சொல்லும் வகையில் பலரும் தங்கள் கிளாமர் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். அதன் மூலம் அவர்களுக்கான வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அப்படி ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி தான் தர்ஷா குப்தா, ஷிவானி உள்ளிட்ட பலரும் வெள்ளித்திரை பக்கம் கால் பதித்திருக்கின்றனர்.

Also read: புத்தம்புது சன் டிவி சீரியலால் விரட்டியடிக்கப்பட்ட விஜய் டிவி.. இணையத்தைக் கலக்கிய டிஆர்பி ரேட்டிங்!

அப்படி ஒரு ஆசையில் தான் பவித்ராவும் இதுபோன்று கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் கருப்பு நிற உடையில் இவர் வெளியிட்ட ஒரு போட்டோ அதிக அளவில் லைக்குகளை வாங்கி குவித்தது. அது மட்டுமல்லாமல் இவர் முன்னணி நடிகைகளையே ஓரம் கட்டும் அளவுக்கு ஒரு போட்டோஷூட் நடத்தி இருந்தார். அதாவது தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வைத்து போட்டோ சூட் செய்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவையே கதி கலங்க வைத்தது.

அதை பார்த்த பலரும் சீரியல் நடிகைகள் எல்லாம் இந்த அளவுக்கு இறங்கி விட்டார்கள் என்று கருத்துக்களை கூறி வந்தனர். ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாத பவித்ரா தொடர்ந்து இது போன்ற வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டு வருகின்றார். மேலும் பட வாய்ப்புகளை பெறுவதற்காக தான் அவர் இப்படி எல்லாம் செய்து வருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது.

Also read: ஆலியா மானசா மட்டுமல்ல சூப்பர் ஹிட் இயக்குனரை வளைத்து போட்ட சன் டிவி.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

Trending News