திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

ரஜினிக்காக தனுஷ் எழுதிய கதை.. உப்புசப்பு இல்லாததால் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக இருக்கக் கூடியவர் தான் நடிகர் தனுஷ். திரைத்துறையில் பன்முக திறமைகளைக் கொண்டுள்ள இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக ஒரு கதையினை தயார் செய்துள்ளார். ஆனால் கதையில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல் இருந்ததால் அதனை ரஜினிகாந்த் நிராகரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்தும் தயாரித்தும் இருந்தார் தனுஷ். அதுமட்டுமல்லாமல் பெயருக்கு மட்டுமே இப்படத்தின் இயக்குனராக வேல்ராஜ் இருந்துள்ளார். ஆனால் படம் முழுவதையும் தனுசே நடித்து இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தின் வெற்றி விழாவின் போது ரஜினி தனுஷிடம் உங்களுக்கு டைரக்ஷன் நன்றாக வருகிறது என்று பாராட்டி உள்ளார். 

Also Read: சொந்த செலவில் சூனியம் வைத்ததால் சைக்கிளுக்கு கூட வழியில்லாத அப்பா.. அவமானப்பட்டு அசுர வளர்ச்சி அடைந்த தனுஷ்

இதனால் நீங்கள் ஏன் இயக்குனராகவும் அவதாரம் எடுக்கக் கூடாது என்பது போல் ஊக்கப்படுத்தியுள்ளார். அதற்கு தனுஷ் பெரிய இயக்குனராக வர வேண்டும். அதுமட்டுமல்லாமல் உங்களை நடிக்க வைத்தே படம் இயக்க வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

அப்படியாக தனுஷ் சூப்பர் ஸ்டார் காகவே தயார் செய்த கதை தான் பவர் பாண்டி. ஆனால் இந்த கதையில் மாஸ் சீன் மற்றும் பஞ்ச் டயலாக் இல்லை என இந்தப் படத்தினை நிராகரித்து விட்டார். மேலும் வருத்தப்பட்டு கொண்டே இந்த படத்தில் ராஜ்கிரனை நடிக்க வைத்து இயக்கியிருந்தார்.

Also Read: லோகேஷ் யுனிவர்சில் ரஜினி இணைய வாய்ப்பே இல்லையாம்.. இந்த ஒன்றை காரணம் காட்டி கழட்டி விட்ட சம்பவம்

இப்படியாக தனுஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பா.பாண்டி. இதில் தனுஷ், ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபஸ்டின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனை தொடர்ந்து தனக்கு ஏற்ற கதை அல்ல என்று நிராகரித்த படத்தில் தனுஷ், ராஜ்கிரனின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள்  ரசிகர்களின் கவனத்தை வெகுவாகவே கவர்ந்தது என்றே சொல்லலாம். மேலும் உப்பு சப்பு இல்லாத கதை என நிராகரித்த சூப்பர் ஸ்டார் முன்னிலையில் தனது படத்தினை வெற்றி படமாக மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரஜினிக்கு நடந்த பெரும் அவமானம்.. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு காரணமான அந்த வார்த்தை

Trending News