திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அந்த விஷயத்தில் கட்டன் ரைட்டாக இருக்கும் ரஜினி.. கமலுக்கு இருக்கும் தைரியம் சூப்பர் ஸ்டாருக்கு இல்ல

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில விஷயங்களில் யார் சொன்னாலும் கட்டன் ரைட்டாக இருக்கக்கூடியவர். தனக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் கடைசி வரை அதை செய்ய மாட்டார். அந்த வகையில் பல வெற்றி படங்களை ரஜினிக்கு கொடுத்திருந்தாலும் ஒரே ஒரு தோல்வி படம் கொடுத்தால் அந்த இயக்குனருடன் ரஜினி மீண்டும் சேர்வது மிகக் கடினம்.

கே எஸ் ரவிக்குமார் முத்து, படையப்பா என ரஜினிக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தாலும் ஒரு தோல்வி படத்தை கொடுத்ததால் இப்போது வரை ரஜினியுடன் இணைய முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

Also Read : ரஜினியை உரசி பார்க்க துணிந்த சிவகார்த்திகேயன்.. நட்பை தாண்டி வரும் சங்கடம்

இதற்கு அடுத்தபடியாக சூர்யாவின் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். ஜெய் பீம் படமே உண்மை சம்பவத்தை அடிப்படையாக எடுத்ததால் ரஜினியின் படமும் உண்மை சம்பவத்தின் தழுவகளாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஞானவேல் இந்தப் படத்தில் சூர்யாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று ரஜினியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் தற்போது வரை இதற்கு எந்த பதிலையும் சூப்பர் ஸ்டார் சொல்லவில்லையாம். ஏனென்றால் இதற்கு முன்னதாக ஜெயிலர் படத்திலும் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பெரிதும் நெல்சன் விரும்பினார்.

Also Read : விஜய்யின் தோல்வி படத்துக்கு காரணம் ரஜினி தான்.. மனம் திறந்து பேசிய கலைப்புலி எஸ் தாணு

ஆனால் ரஜினி தன்னுடைய காட்டுக்கு நான் தான் ராஜா என்பது போல என்னுடைய படமாக மட்டுமே இருக்க வேண்டும் என சிவகார்த்திகேயனை மறுத்துவிட்டார். அதேபோல் தான் ஞானவேல் படத்திலும் சூர்யாவை நடிக்க வைக்க ரஜினி சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இப்போது உள்ள காலத்திற்கு ஏற்றார் போல் கமல் தன்னுடைய படங்களில் இளம் ஹீரோக்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதேபோல் தான் விஜய் சேதுபதியும் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். ஆனால் ரஜினி தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து விலக தயக்கம் காட்டி வருகிறார்.

Also Read : மேக்கப் மேனை பெரிய தயாரிப்பாளர் ஆக்கிய நடிகை.. ரஜினி பட ஹீரோயினுக்கு இருந்த தாராள மனசு

Trending News