சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ரஜினி, கமல் கைவிட்ட அந்த மாதிரியான படங்கள்.. வாய்ப்பில்லை என வெளிப்படையாக பேசிய சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. மேலும் தொடர்ந்து இளம் இயக்குனர்களின் படங்களில் கமலஹாசன் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். அதேபோல் ரஜினியும் இளம் இயக்குனர்களை தான் தேர்வு செய்து வருகிறார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து ரஜினி வருகிறார். தனது அடுத்த படத்திற்கான இயக்குனர் டான் படத்தின் மூலம் அறிமுகமான சிபி சக்கரவர்த்தியை ரஜினி தேர்வு செய்துள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவின் இரண்டு ஆளுமைகளான கமல் மற்றும் ரஜினி தற்போது உள்ள ட்ரெண்ட் ஏற்றார் போல் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள்.

Also Read :லதா ரஜினிகாந்த் வீட்டில் எம்ஜிஆர் போட்ட சண்டை.. புரட்சித்தலைவர் தந்த சர்டிவிகேட்

இதனால் தான் பெரிய நடிகர்கள் தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வருகிறார்கள். ஆனால் சமீபகாலமாக ரஜினி மற்றும் கமல் தங்களது பழைய படங்களில் உள்ள சில விஷயங்களை கைவிட்டு உள்ளனர். அப்போது 80, 90களில் முழு நீள காமெடி படங்களில் ரஜினி, கமல் நடித்துள்ளனர்.

அதாவது கிரேசி மோகனின் வசனத்தில் கமலஹாசன் பல நகைச்சுவை படங்களில் நடித்துள்ளார். பஞ்சதந்திரம், தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற முழு நீள நகைச்சுவை படங்களில் கமல் நடித்த அசத்தியுள்ளார். ஆனால் தற்போது அவருடைய படங்களில் நகைச்சுவை என்ற இடம் வெற்றிடமாக உள்ளது.

Also Read :எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கமல்ஹாசன்.. கடைசியில் வருந்திய சம்பவம்

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தில்லு முல்லு, வீரா போன்ற காமெடி படங்களில் நடித்து உள்ளார். ஆனால் சமீபகாலமாக வெளியாகும் ரஜினியின் படங்களில் நகைச்சுவை இருந்தாலும் முழு படமும் காமெடி ஜானலில் எடுக்கப்படுவதில்லை.

இவ்வாறு ஒரு முழு படமும் காமெடியாக கொடுத்தால் தற்போது உள்ள இளம் ரசிகர்களை கவருமா என்ற சந்தேகம் இவர்களுக்கு எழந்துள்ளது. இதனால் முழுக்க முழுக்க காமெடி ஜானலில் எடுக்கப்படும் படங்களை கமல், ரஜினி தவிர்த்து வருகிறார்கள். மேலும் இது போன்ற படங்களில் நடிக்க இனி வாய்ப்பே இல்லை என்பது போல ரஜினி ஒரு மேடையில் பேசி இருந்தார்.

Also Read :கிரேசி மோகனின் மறக்க முடியாத 7 படங்கள்.. கமலஹாசனுக்கு மட்டும் இத்தனை ஹிட் படங்களா.?

- Advertisement -spot_img

Trending News