திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

2 பிள்ளை பெற்ற பிறகு ரஜினிக்கு வந்த காதல்.. அந்த நடிகையை தான் கட்டுவேன் என முரண்டு பிடித்த சூப்பர் ஸ்டார்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் நடிக்க வந்த காலகட்டத்தில் சில நடிகைகளை காதலித்தார் என்ற செய்திகள் அப்போது பத்திரிகைகளில் கிசுகிசுவாக வெளிவந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஸ்ரீதேவியை அவர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட கதையும் எல்லோருக்கும் தெரியும்.

இப்படி அவர் மீது பல சர்ச்சைகள் இருந்த நிலையில் லதாவை திருமணம் செய்து கொண்டு தன்னைப் பற்றிய வதந்திகள் அனைத்தையும் அவர் பொய்யாக்கினார். ஆனால் திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகளை பெற்ற பிறகு பிரபல நடிகை ஒருவரை ரஜினி விரும்பியது பலருக்கும் ஆச்சரியம்தான்.

Also read: ஊரே பத்திகிட்டு எரியுது உங்களுக்கு என்ன கவலை.. வாயை திறக்காத ரஜினி, கமல், விஜய், அஜித்தால் பெரும் சர்ச்சை

அந்த வகையில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக கொடி பறக்குது, மாப்பிள்ளை, வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்த அமலா மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு வந்திருக்கிறது. அதை தொடர்ந்து கட்டினால் அவரை தான் கட்டுவேன் என்ற அளவுக்கு அவர் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

மனைவி, இரண்டு பெண் குழந்தைகளை கூட மறந்து அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து மனைவியை விவாகரத்து செய்யலாம் என்ற நினைப்பில் கூட அவர் இருந்தாராம். இதையெல்லாம் கேள்விப்பட்ட பாலச்சந்தர் ரஜினியை கூப்பிட்டு புத்திமதி கூறியிருக்கிறார்.

Also read: குடி மட்டும் தான் வாழ்க்கை என இருந்த 5 நடிகர்கள்.. மீண்டும் சூப்பர் ஸ்டார் போல் வெற்றி பெற்ற பிரபலங்கள்

அதாவது, ஒழுக்கமாக இருந்தால் தான் நீ சினிமாவில் வளர முடியும். அதை விட்டுவிட்டு இதுபோன்று நடிகை பின்னால் அலைந்தால் உன் எதிர்காலம் மட்டுமல்லாமல் குடும்பத்தின் எதிர்காலமும் பாழாகிவிடும் என்று கண்டித்து இருக்கிறார்.

மேலும் பெண் குழந்தைகள் வைத்திருக்கும் நீ இதுபோன்று ஒழுக்கம் இல்லாத செயலை செய்யலாமா என்று கேட்டிருக்கிறார். அதன் பின்பு தான் ரஜினி தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் வாழ ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் அமலாவை தான் கட்டுவேன் என முரண்டு பிடித்த சூப்பர் ஸ்டாரை பாலச்சந்தர் வழிக்கு கொண்டு வந்து நல்ல முறையில் மாற்றி இருக்கிறார்.

Also read: மதுவால் வாழ்க்கை இழந்த நடிகை.. நடை பிணமாக மாறிட்டேன் என புலம்பிய கமல், ரஜினி பட ஹீரோயின்

Trending News