சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அக்காவுக்கு போட்டியாக மல்லுக்கட்டும் தங்கச்சி.. மகளின் பிடிவாதத்தால் தலையாட்டிய உச்ச நடிகர்

உச்ச நடிகர் இப்போது ஓவர் டைம் பார்த்து நடித்து வருகிறார். அந்த அளவுக்கு அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இளம் ஹீரோக்களுக்கே போட்டியாக மாறி இருக்கிறார். அதில் சொந்த வாழ்க்கையில் நொந்து போயிருக்கும் மூத்த மகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவர் படத்தில் உச்ச நடிகர் நடித்துக் கொடுத்தார்.

எப்படியாவது முன்னேறினால் சரிதான் என்று நடிகர் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அக்காவுக்கு மட்டும்தானா எனக்கு இல்லையா என சின்ன மகளும் இப்போது போட்டிக்கு வந்து விட்டாராம். ஏற்கனவே சின்ன மகளுக்கு வாய்ப்பு கொடுத்து நடிகர் பட்ட பாடு ஊருக்கே தெரியும்.

அந்தப் படத்தை மொத்தமாக அவர் சொதப்பி வைத்திருந்த நிலையில் மீண்டும் அப்பாவை வைத்து ரிஸ்க் எடுக்கிறாரே என ஒரு பேச்சு இப்போது அடிபட்டு வருகிறது. ஆனால் சின்ன மகளை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லாமல் சரி உன் படத்திலும் நடிச்சு கொடுக்கிறேன் என பத்து நாள் கால்ஷீட்டை உச்ச நடிகர் தூக்கி கொடுத்து விட்டாராம்.

Also read: குழந்தை ஆசையால் அழிந்து போன காதல்.. விவாகரத்துக்கு தயாராகும் ஜோடி

இதனால் குஷியான தங்கை அக்காவை எப்படியாவது முந்தி விட வேண்டும் என்று தீயாக வேலை செய்து வருகிறாராம். அது மட்டுமல்லாமல் அப்பாவின் சிஷ்யனான அந்த நடிகரையும் தன் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்கவும் வைத்து விட்டாராம்.

ஆனால் நடிகருக்கு இதில் முழு மனதோடு சம்மதம் இல்லை என்றாலும் நட்புக்காக ஓகே என்று சொல்லி இருக்கிறார். அதேபோல் தற்போது பிஸியாக இருக்கும் அந்த ஒல்லி இசையமைப்பாளரை புக் செய்யலாம் என தங்கைக்கு அட்வைஸ் வந்திருக்கிறது.

ஆனால் அவரோ நம்ம வளர்த்து விட்ட பிள்ளை நம்மகிட்டயே ஆட்டிட்யூட் காட்டுது என கோபத்தில் முடியவே முடியாது என மறுத்து வருவதாக தகவல்கள் கசிந்து உள்ளது. எது எப்படியோ அப்பாவை வைத்து விளையாடாமல் பொறுப்போடு நடந்து கொண்டால் சரிதான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Also read: குழப்பத்தை ஏற்படுத்த போடும் திட்டம்.. முழு அரசியல்வாதியாக மாறிய நடிகர்

Trending News