வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோவுடன் போட்டி போடும் கங்குவா.. சூர்யாவின் மனக்குறையை போக்க படாத பாடுபடும் டீம்

சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பம் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் லியோவுக்கு போட்டியாக இப்படம் உருவாகிறது என்ற ஒரு பேச்சும் இப்போது அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இதன் தமிழுக்கான டிஜிட்டல் உரிமை மட்டும் 80 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த மொழிகளிலும் இதன் வியாபாரம் இப்போதே களை கட்ட ஆரம்பித்துள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு ஃப்ரீ பிசினஸ் இருக்கும் எனவும் தயாரிப்பாளர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: கமல், விஜய் படங்களும் இப்படி தான் எதிர்ப்பு கிளம்பியது.. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வக்காலத்து வாங்கும் பிரபலம்

அந்த வகையில் இப்போதே 100 கோடியை தாண்டி வியாபாரம் ஆகி இருக்கிறது என பட குழு கெத்தாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இது அத்தனையும் சூர்யாவுக்காக அள்ளி விடும் புருடாவாம். மேலும் அவரை திருப்திபடுத்துவதற்காகவே தயாரிப்பு தரப்பு இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகிறதாம்.

ஏனென்றால் சூர்யாவுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு மனக்குறை இருந்து வருகிறது. அதாவது பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போடும் அஜித், விஜய் படங்களுக்கு ஈடாக தன்னுடைய படமும் பட்டையை கிளப்பி கெத்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறாராம். அதனாலேயே இப்போது படக்குழு கங்குவா கோடி கணக்கில் பிசினஸ் ஆகிவிட்டது என்று கூறுகிறார்களாம்.

Also read: புது அவதாரம் எடுத்திருக்கும் விஜய்யின் வாரிசு.. அப்ப எஸ்ஏசி சொன்னதெல்லாம் உண்மைதான் போல

மேலும் லியோ படத்திற்கே கங்குவா ஆட்டம் காட்டுகிறது என்ற ஒரு கட்டுக் கதையையும் அவிழ்த்து விட்டு இருக்கிறார்கள். அதற்கேற்றார் போல் இப்போது இந்த இரு படங்கள் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கங்குவா, லியோ படத்தின் ஃப்ரீ பிசினஸை முறியடித்துள்ளது என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.

ஆனால் இது முழுக்க முழுக்க சூர்யாவை திருப்திபடுத்துவதற்காக செய்யப்படும் வேலை மட்டுமே. இதன் மூலம் பட குழு ரிலீசுக்கு முன்பே படம் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் லியோ அடுத்தடுத்த அப்டேட்டுகள் மூலம் அதிக கவனம் ஈர்த்து வருகிறது. அதை கங்குவா முறியடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: தளபதியை வைத்து பப்ளிசிட்டி தேடும் பாலிவுட்.. இணையத்தில் ட்ரெண்டாகும் விஜய் 69

Trending News