அந்தக் கால சினிமாவை தன்னுடைய உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் ஆட்சி செய்த சிவாஜி எண்ணற்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எந்த கேரக்டராக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் இவரை நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் சக நடிகைகளுக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் சிவாஜியுடன் நடித்த ஒரு நடிகை அவர் மீது எல்லையில்லா காதலை வைத்திருந்தார்.
நடிகர் திலகம் எத்தனையோ நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் பத்மினியுடன் தான் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நாட்டிய பேரொளி என்று புகழப்படும் பத்மினி சிவாஜியுடன் இணைந்து தில்லானா மோகனாம்பாள் உட்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதனாலேயே இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம்.
Also read: சென்டிமென்ட்டாக 43 நாட்களுக்குள் வெளியான 6 படங்கள்.. முதலும் கடைசியுமாக சிவாஜி செய்த சாதனை
அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாக கூட அந்த கால பத்திரிகைகளில் செய்தியாகவே வெளிவந்தது. இத்தனைக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடிக்க வரும்போதே சிவாஜிக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனாலும் ரசிகர்கள் இவர்களின் ஜோடி பொருத்தத்தை ரசித்தனர். அதே போன்று சிவாஜி பத்மினி மீது நட்பின் அடிப்படையில் அன்பு காட்டி இருக்கிறார்.
ஆனால் பத்மினி தான் சிவாஜி மீது காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பார்க்கலாம். அவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த பொழுது சிவாஜி பத்மினிக்கு தாலி கட்டுவது போன்ற ஒரு காட்சியை படமாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பத்மினி இதை நிஜ கல்யாணமாகவே பாவித்து அந்த தாலியை யாருக்கும் தெரியாமல் ஆறு மாத காலம் வரை கழுத்திலேயே மறைத்து வைத்திருக்கிறார்.
Also read: சிவாஜிக்கு பெருமையை சேர்த்த படம்.. 80 அடி கட் அவுட்டால் ஸ்தம்பித்த சென்னை
இது எப்படியோ பத்மினியின் சகோதரிக்கு தெரிய வர அவர் தன் அம்மாவிடம் இது பற்றி கூறியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன பத்மினியின் அம்மா நிஜ வாழ்க்கையும் சினிமாவும் ஒன்று கிடையாது. சினிமாவுக்காக கட்டிய தாலியை இப்படி கழுத்தில் போட்டிருப்பது தவறு என அவருக்கு எடுத்து சொல்லி புரிய வைத்து அந்த தாலியை கழட்ட வைத்திருக்கிறார்.
இந்த ஒரு நிகழ்வே அவருக்கு சிவாஜியின் மீது எந்த அளவுக்கு காதல் இருந்தது என்பதை காட்டுகிறது. அதன் பிறகு பத்மினி 1961 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தன் கணவருடன் அமெரிக்கா சென்று விட்டார். அங்கு அவர் ஒரு நடன பள்ளியை ஆரம்பித்து திறம்பட நடத்தி வந்தார். அந்த இன்ஸ்டிட்யூட் இப்போது அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்குகிறது.
Also read: வெறும் 15 நாட்களில் உருவான சிவாஜியின் படம்.. மொத்த தியேட்டரையும் அதிரவைத்த எம் ஆர் ராதா