திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

முதலில் ரஜினிக்கு கொடுத்த அந்த பட்டம்.. பதறிப்போய் டக்குனு மாத்திய கலைப்புலி தாணு

Actor Rajini: தன் ஸ்டைலாலும், நடிப்பாலும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் ரஜினி. தற்போது தமிழ் சினிமாவில், புகழின் உச்சியில் இருக்கும் இவருக்கு எப்படி அந்த பட்டம் வந்தது குறித்த தகவலை இங்கு காண்போம்.

ரஜினியின் படங்கள் பெரும்பாலும் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக தான் வெளிவந்து வெற்றி கண்டிருக்கிறது. ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து இவரின் படங்கள் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது. அதைக் கொண்டு கலைப்புலி தாணு இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கினார்.

Also Read: மீனாவின் அழகில் மயங்கி கிடந்த 4 நடிகர்கள்.. காதல் எனக் கூறி திருமணம் வரை சென்று கழட்டிவிட்ட சம்பவம்

தற்போது இப்பட்டத்திற்கு இவர் தான், அவர் தான் என பல பேச்சுக்கள் விழுந்த நிலையில், மிகுந்த போட்டா போட்டி நிலவி வருகிறது. இப்பட்டம் முதலில் ரஜினிக்கு தான் வழங்கப்பட்டது அதை கொண்டே மக்கள் இவரை சூப்பர் ஸ்டார் என அழைத்து வந்தார்கள்.

தமிழ் சினிமாவில் சிறந்த தயாரிப்பாளரும் மற்றும் விநியோகஸ்தருமான கலைப்புலி தாணு முதன்முதலாக பைரவி படத்தில் தான் இவருக்கு அகில இந்திய சூப்பர் ஸ்டார் என பெயரிட்டாராம். அகில இந்தியா என்பது இந்தியாவுக்கே இவர் தான் சூப்பர் ஸ்டாரா என கேள்வி எழ தொடங்கியதாம்.

Also Read: எந்த நடிகர்களிடம் பார்க்காத கமலின் 6 அதிசய குணங்கள்.. 5 வயதில் சம்பளமாக எத கேட்டார் தெரியுமா.?

அதை குறித்து பல சர்ச்சைகளும் ஏற்பட்ட தன் காரணமாக கலைப்புலி தாணு பதறிப்போய் டக்குனு அகில இந்தியாவை நீக்கிவிட்டு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினிக்கு வழங்கினார். அப்பவே ரஜினிக்கு இப்பட்டம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதை தொடர்ந்து ரஜினி படங்களின், பாடல்களில் சூப்பர் ஸ்டார் என்னும் வார்த்தை எழ தொடங்கியது.

இதையெல்லாம் பொருட்படுத்தாது, அரசியல் ரீதியாக இப்பிரச்சனையை ஊதி பெரிதாக்கி வருகின்றனர். மேலும் அதற்கு தகுந்தவாறு, தற்பொழுது ரஜினி படமான ஜெயிலர் பட பாடல் மூலம் பப்ளிசிட்டி தேடி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் இத்தகைய அனுபவம் கொண்ட ரஜினி, இளம் நடிகரோடு போட்டி போடுவது சற்று வேதனையை அளித்து வருகிறது.

Also Read: வேற லெவலில் பட்டையை கிளப்பும் யோகி பாபு.. ஜவான் படத்தில் அதிகப்படியாக வாங்கிய சம்பளம்

Trending News