Dhanush 50: தனுஷ் இப்போது தான் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தை முடித்து இருக்கிறார். ஆனால் அதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்களில் தனுஷ் தன்னை பிசியாக்கி கொள்கிறார். அந்த வகையில் தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார்.
இதற்கான பூஜை இன்று சத்தமே இல்லாமல் ஈசிஆரில் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். இந்நிலையில் தனுஷின் ஐம்பதாவது படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
Also Read : ஒரே இடத்தில் படப்பிடிப்பை நடத்த போகும் தனுஷ்.. மாசாக வந்துள்ள 50வது பட அப்டேட்
அதன்படி கொல மாசாக ஒரு டைட்டிலை செலக்ட் செய்துள்ளார் தனுஷ். அதாவது ராயன் என்று தனுஷ் ஐம்பதாவது படத்திற்கு டைட்டில் வைத்துள்ளார். சன் பிக்சர்ஸின் கலாநிதி மாறன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் வட சென்னையை மையப்படுத்தி பழிவாங்கும் கதையை வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆகையால் இப்படம் வடசென்னை இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மேலும் ராயன் படத்திற்காக பிரம்மாண்ட செட் போடும் பணி நடந்து வருகிறதாம். அதாவது ஒரே இடத்தில் கிட்டத்தட்ட 500 வீடுகள் இடம் பெறுவது போல் செட் அமைத்து வருகிறார்கள். அடுத்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் 90 நாட்களிலேயே படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
Also Read : கேப்டன் மில்லரில் இருந்து வெளியே வந்த தனுஷ்.. திருப்பதியில் மொட்டை அடித்து தரிசனம் செய்த வைரல் போட்டோ
ஆகையால் வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் தனுஷ் முடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். மேலும் படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் யார் என்று விவரம் விரைவில் வெளியாகும்.
இப்போது ராயன் படத்தின் அப்டேட் ரசிகர்களை திக்கு முக்காட செய்தாலும் கேப்டன் மில்லர் போஸ்டர் சமீபத்தில் வெளியானதால் ட்ரெய்லருக்காக காத்திருக்கிறார்கள். மேலும் கேப்டன் மில்லர் படத்தின் மூலம் தனுஷ் மீண்டும் தரமான கம்பக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

Also Read : ஓவர் ஆட்டிடியூட் காட்டிய அஜித் மச்சினிச்சி.. ஹீரோயினையே மாற்றிய தனுஷ்