வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவின் 42 வது படத்தின் தலைப்பு.. வெற்றியை உறுதி செய்த சிறுத்தை சிவா

சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறி விட்டார். இதைத்தொடர்ந்து சூர்யாவின் கைவசம் வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42 வது படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவின் 42 ஆவது படத்தில் திஷா பதானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும் இந்த படம் 3d அனிமேஷனில் உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி முதல் முறையாக சூர்யாவின் 42வது படம் 10 மொழிகளில் உருவாகி வருகிறது.

Also Read : ரிலீஸுக்கு முன்பே பல நூறு கோடி பிசினஸ் செய்த 6 படங்கள்.. மலைக்க வைத்த சூர்யாவின் 42வது படம்

மேலும் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது. இப்போது சூர்யா 42 வது படத்திற்கான தலைப்பு வெளியாகி உள்ளது. பொதுவாக சிறுத்தை சிவா, அஜித்தை வைத்து இயக்கும் படங்களில் வி சென்டிமென்ட் பார்ப்பார். அந்த வகையில் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தது.

அதே செண்டிமெண்ட்டை தான் சூர்யா படத்திலும் பயன்படுத்தி உள்ளார். அதாவது இந்த படத்திற்கு வீர் என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வீர் என்ற பொருளுக்கு வெற்றி என்று அர்த்தம். ஆகையால் இப்போதே இந்த படத்தின் வெற்றி 100% உறுதி என சூர்யா ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

Also Read : வணங்கான் படத்தை தொடர்ந்து வாடிவாசலுக்கும் அதே நிலை.. பொறுமையை இழந்து விஜய் கதையில் கமிட்டான சூர்யா

மேலும் வீர் என்ற தலைப்புடன் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். சூர்யா வணங்கான் படத்தை கைவிட்ட நிலையில் வீர் படம் கிடைத்துள்ளதாகவும் சிலர் கூறி வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் யார் நடித்துள்ளார்கள் என்ற தகவல் விரைவில் வெளியாகும்.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் சுதா கொங்கிராவுடன் புதிய படத்தில் இணைய உள்ளார். அதன் பிறகு வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முழு நீள படமாக எடுக்க உள்ள நிலையில் அந்த படத்திலும் சூர்யா நடிக்க விருக்கிறார்.

Also Read : ரிலீசுக்கு முன்பே கொட்டும் பண மழை.. பல கோடிகளில் பிசினஸ் ஆன சூர்யா 42

Trending News