வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஐந்து ரூபாய்க்கு நடிக்க வந்த டாப் நடிகர், ஆணவத்தில் ஆடிய கமல்.. உண்மையை புட்டு புட்டு வைத்த பாரதிராஜா

தன் தனித்துவத்தால் தமிழ் சினிமாவிற்கு அடையாளமாக முத்திரை பதித்தவர் தான் பாரதிராஜா. இவரின் எண்ணற்ற படங்களில் இவரது முதல் படமான பதினாறு வயதினிலே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அன்று முதல் இன்று வரை இவர் சினிமாவிற்கு ஆற்றிய அர்ப்பணிப்புகள் ஏராளம். இருப்பினும் இவர் பிரபலங்களான கமல், ரஜினியை வைத்து இயக்கிய படங்கள் கொஞ்சம் தான்.

Also Read: மரணப்படுக்கையில் ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசை.. கமலை கண்ணீர் விட வைத்த சம்பவம்

இதைத்தொடர்ந்து இன்டர்வியூ ஒன்றில் இவரிடம் இந்த கேள்வியை முன் வைத்தனர். அதற்கு அது காலம் கடந்த உண்மை அதை இப்பொழுது சொன்னாலும் தப்பு கிடையாது என்று சொல்ல ஆரம்பித்தார்.

மேலும் 1995ல் இவரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கைதியின் டைரி வெள்ளி விழா கண்டது. அதில் கமல், ராதா, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அப்படபிடிப்பின் கடைசி ஷூட்டில் கமல் தன்னை கோபப்படுத்தியதாக இவர் கூறியுள்ளார்.

Also Read: உலகநாயகன், சூப்பர் ஸ்டார் படத்தை மட்டும் இயக்கவே மாட்டேன்.. அடித்துச் சொன்ன டாப் இயக்குனர்

மேலும் கமல் தன்னை இனி லாஸ்ட் ஷூட்டிற்கு அழைத்தால் போதும் என்று கூறியது இவருக்கு ஆத்திரத்தை உண்டு படுத்திருக்கிறது. அதன்பின் கமல் தன்னை அதிமேதாவி என காட்டுவதற்காக ஆங்கிலத்தில் பேசியதாகவும் இவர் கூறியுள்ளார். இத்தகைய ஆணவம் இவருக்கு இன்று வரை இருக்கிறது என்றும் கூறினார்.

மேலும் இதைத் தொடர்ந்து ரஜினியை வைத்து ஏன் எந்த படமும் எடுக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அன்றைய காலத்தில் ரஜினி சம்பளமாக முப்பது லட்சம் வாங்கினார். அதனால் அவ்வளவு சம்பளம் என்னால் கொடுக்க முடியாததால் அவரை வைத்து படம் எடுக்க தயங்கினேன் என்று கூறினார்.

Also Read: கமலை உயிருக்குயிராய் காதலித்த நடிகை.. கெஞ்சி, கதறியும் ஏற்காத உலகநாயகன்

அதை அறிந்த ரஜினி பாரதிராஜாவின் சட்டை பையில் இருந்து ஐந்து ரூபாயை எடுத்து கொண்டாராம். இதை நான் முன் பணமாக வைத்துக் கொள்கிறேன் மேற்கொண்டு படம் வெளிவந்த பிறகு சம்பளத்தை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியது இவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் ரஜினி போன்ற நல்ல மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று பெருமிதம் கொண்டார். இப்படி அவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் மனிதன். அந்த வகையில் ரஜினிக்கு இருக்கும் பெருந்தன்மை கமலிடம் இல்லாததால் அவரை வைத்த படம் எடுக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

Also Read: 34 வருடம் கழித்து மீண்டும் ரஜினி நடிக்கும் கதாபாத்திரம்.. அவரே ஆசைப்பட்டு சொன்ன கதை

Trending News