புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வாரிசு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் டாப் ஹீரோ.. ஒரே குடும்பத்தில் நடிக்கும் 8 பிரபலங்கள்

சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே வாரிசின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் தான் அதிகமாக வாரிசு பிரபலங்கள் நுழைவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும் திறமையான நடிகர்கள் அங்கு வளர முடியாது என்ற பேச்சும் வழக்கில் உள்ளது.

ஆனால் பாலிவுட்டை காட்டிலும் தெலுங்கு சினிமாவில் ஒரு நடிகரின் குடும்பத்தில் 8 பிரபலங்கள் சினிமாவில் நடித்து வருகிறார்கள். வாரிசு நடிகர்கள் சினிமாவில் நுழைவது சரி, தவறு என்பதை காட்டிலும் திறமை வாய்ந்தவர்களாக உள்ளார்களா என்பது தான் முக்கியம். ஏனென்றால் அவர்களால் தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்.

Also Read : அக்கட தேசத்திலும் டான் ஆன தளபதி.. சிரஞ்சீவி பாலையாவை ஓரம் கட்டிய விஜய்

தெலுங்கில் சீனியர் நடிகரான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து தான் 8 பிரபலங்கள் சினிமாவில் நுழைந்துள்ளனர். சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த சிரஞ்சீவி அரசியலிலும் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிரஞ்சீவி அல்லு ராமலிங்கையாவின் மூத்த மகளான சுரேகாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய மகன் ராம்சரண் தான் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சிரஞ்சீவி மனைவி சுரேகாவின் அண்ணன் அல்லு அரவிந்தும் நடிகர் தான். அவருடைய மகன் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் சிரஞ்சீவி சினிமாவில் சாதித்த பிறகு அவருடைய தம்பி நாகேந்திர பாபுவும் படங்களில் நடிக்க தொடங்கினார்.

Also Read : வாய்க் கொழுப்பால் மாட்டிக்கொண்ட சிரஞ்சீவி.. பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட அமீர்கான்

அதுமட்டுமின்றி சிரஞ்சீவியின் இளைய தம்பியான பவன் கல்யாண் நடிகராக கால் பதித்திருந்தார். இவரைத் தொடர்ந்து நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜா முகுந்தா படத்தின் மூலம் அறிமுகமாகி அவரும் இப்போது நடிகராக உள்ளார். இதைத்தொடர்ந்து வருண் தேஜின் தங்கை நிஹாரிகாகவும் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

இவ்வாறு சிரஞ்சீவி குடும்பத்தில் இருந்து ஒவ்வொருவராக சினிமாவில் நுழைந்துள்ளனர். மேலும் பவன் கல்யாண் குழந்தைகள் சிறு வயது என்பதால் விரைவில் அவர்களும் சினிமாவில் நுழைய வாய்ப்புள்ளது. இப்படி சிரஞ்சீவியின் குடும்பமே சினிமாவில் கொடி கட்டி பறக்கிறது.

Also Read : அஜித் விஜய்யை பின்னுக்கு தள்ளிய ராம்சரண்.. ஷங்கர் பட சம்பளம் இத்தனை கோடிகளா?

Trending News