வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டாப் ஹீரோவின் மார்க்கெட்டை சல்லி சல்லியாக நொறுக்கிய ஜெயிலர்.. நூறிலிருந்து 650 தியேட்டர்களை உயர்த்திய சம்பவம்

Jailer Rajini: ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் போன்ற மற்ற மொழி ஸ்டார்கள் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்கள். தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகளும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தனர்.

ரஜினி இதுவரை கமர்சியல் படங்களில் நடித்து வந்த நிலையில் மிகவும் வித்தியாசமான ஜானரில் எடுக்கப்பட்ட டார்க் காமெடி படத்தில் நடித்திருந்தார். அதிலும் யோகி பாபு உடன் அவர் நடிக்கும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மேலும் இப்போது வரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் 400 கோடி வசூலை தொட்டுவிட்டது.

Also Read : ரஜினி ஜெயிலர் படத்தால் பழையபடி வரும் ஹீரோ வாய்ப்பு.. ஜெட் வேகத்தில் சும்மா ஸ்விங்ன்னு ஏரிய சம்பளம்

இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தால் பெரிய ஸ்டார் ஒருவரின் படம் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதாவது தெலுங்கில் சிரஞ்சீவியின் போலா சங்கர் படம் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமாவில் ஜெயிலர் படத்திற்கு எப்படி எதிர்பார்ப்பு இருந்ததோ அதேபோல்தான் தெலுங்கிலும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.

தமிழில் அஜித்தின் நடிப்பில் வெளியான வேதாளம் ரீமேக் தான் போலா சங்கர். மேலும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்ததால் முதல் வாரத்தில் கிட்டத்தட்ட 850 திரையரங்குகளில் போலா ஷங்கர் படம் திரையிடப்பட்டது. ஆனால் படத்திற்கு மோசமான விமர்சனங்கள் தான் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

Also Read : சிவராஜ் குமாரை பார்த்து பயந்த ஜெயிலர் படக்குழு.. டைகர் இருக்க பயமேன் என அதிர வைத்த ரஜினி

இதனால் இந்த வாரம் 700 தியேட்டர்களிலிருந்து போலா சங்கர் படம் தூக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாரம் தெலுங்கு திரை உலகில் வெறும் 100 தியேட்டரில் மட்டும் தான் இந்த படம் திரையிடப்பட்ட இருக்கிறதாம். மற்ற திரையரங்குகளில் ரஜினியின் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் படம் தான் வெளியாக இருக்கிறது.

மேலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முதல் வாரத்தில் 500 திரையரங்குகளில் ஜெயிலர் படம் வெளியாகி இருந்தது. சில திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது ஜெயிலர் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பின் காரணமாக 100 திரையரங்குகள் கூடுதலாக அதாவது 650 தியேட்டர்களில் ஜெயிலர் படம் திரையிடப்படுகிறது.

Also Read : அஜித் வரிசையில் மாட்டிக்கொண்ட ரஜினி.. வெற்றி கொடுத்தும் பிரயோஜனம் இல்லாத நிலை

Trending News