ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரஞ்சித் சார் தங்கலானுக்கு பொருத்தமான ஆளு விக்ரம் தான்.. வாய்ப்பு கொடுத்து விலகி நின்ற நடிகர்

Thangalaan Movie: பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர் இன்று வெளியானது. ரத்தமும் யுத்தமும் கலந்த பழங்குடி மக்களின் வாழ்க்கையை இந்த டீசரில் காட்டி இருக்கின்றனர். இதில் கரிய நிறமும் ஜடாமுடியுடன் சியான் விக்ரம் மிரட்டி இருக்கிறார்.

இந்த படம் நிச்சயம் சியான் விக்ரமின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமையும். இப்படிப்பட்ட அரிய வாய்ப்பு விக்ரமுக்கு கிடைப்பதற்கு நடிகர் ஒருவர்தான் காரணமாக இருந்துள்ளார். இந்த விஷயத்தை டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரே வெளிப்படையாக பேசியது வைரல் ஆகிறது. அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துடன் இணைந்து பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷனும் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகும் இந்த படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்தால்தான் சரியாக இருக்கும் என சூர்யா தனக்கு வந்த வாய்ப்பை சியானுக்கு கொடுத்துவிட்டு விலகி விட்டார். விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு எப்போதுமே ஆசைப்பட்டதில்லை. இவர்கள் இருவரும் தங்களுடைய திறமையான நடிப்பை காட்ட வேண்டும் என்பதில்தான் குறிக்கோளாக இருக்கின்றனர்.

Also Read: என்னையவா பின்னாடி தள்ளுறீங்க! விக்ரம் போட்ட போடு.. 3வது இடத்துக்கு பதுங்கி பாய்ந்த புலி

பேரும் புகழும் பட்டமும் இவர்களுக்கு தேவை இல்லை. நடிப்பு அரக்கர்களாக இருக்கக்கூடிய இவர்கள் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் தங்கலான் படத்தில் விக்ரமின் கெட்டப் பார்க்கும்போதே நடுநடுங்க வைக்கிறது. இந்த வாய்ப்பு முதலில் சூர்யாவுக்கு தான் சென்றது.

ஆனால் அவர் விக்ரம் தான் இதற்கு சரியான ஆள் என்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜாவிடம் சொல்லிவிட்டு விலகியது பெரிய விஷயம் தான். தற்போது சூர்யாவும் கங்குவா படத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக வாடிவாசல், சுதா கொங்கரா இயக்கும் படம், லோகேஷின் இரும்புக்கை மாயாவி என நான்கு பெரிய பட வாய்ப்பு கையில் வைத்திருக்கிறார்.

ஆனால் விக்ரம் கடந்த சில வருடங்களாக வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிச்சயம் தங்கலான் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதுக்காக வேண்டியே சூர்யா, இந்த படத்தில் விக்ரம் தான் நடிக்க வேண்டும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் சிபாரிசு செய்தார்.

Also Read: என்னையவா பின்னாடி தள்ளுறீங்க! விக்ரம் போட்ட போடு.. 3வது இடத்துக்கு பதுங்கி பாய்ந்த புலி

Trending News