செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தொடர் தோல்வியால் ஜெயம் ரவியை தூக்கி விடப் போகும் டாப் ஹீரோ.. நிறைவேறப் போகும் நீண்ட நாள் கனவு

Jayam Ravi: ஜெயம் ரவி சினிமாவிற்குள் குதித்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆன நிலையிலும், தற்போது வரை ஒரு ஆவரேஜ் ஹீரோ என்ற இமேஜுடன் தான் சுற்றி வருகிறார். அதற்கு காரணம் இரண்டு படங்கள் நல்ல ஹிட் ஆகிவிடும். அடுத்து ஐந்து படங்கள் தொடர் தோல்வியை கொடுத்து இவருடைய மார்க்கெட்டை குறைத்து விடும். இதுனாலையே இவருடைய கேரியர் அடுத்த கட்டத்திற்கு போக முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கோமாளி படத்திற்கு பின் பெருசாக சொல்லும்படியாக எந்த படமும் மக்களிடம் ரீச் ஆகவில்லை. இந்த சூழலில் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பொன்னியின் செல்வன். இதில் அதிக வரவேற்பை பெற்றாலும் அடுத்து வெளிவந்த அகிலன், இறைவன் படங்கள் தோல்வியை கொடுத்து இவரை டவுன் ஆக்கி விட்டது. இதனைத் தொடர்ந்து பிரதர், சைரன், ஜீனி, குண்டர் வாழ்க்கை போன்ற படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

இதற்கிடையில் இவருடைய நீண்ட நாள் கனவு ஒன்று தற்போது நிறைவேறப் போகிறது. அதாவது தொடர் தோல்வியை சந்தித்து வந்த இவரை கை தூக்கி விடும் விதமாக டாப் ஹீரோ முன் வந்திருக்கிறார்ர். அவர் வேறு யாருமில்லை உலக நாயகன், தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி கமிட் ஆகி இருக்கிறார்.

Also read: இறைவன் கைவிட்டதால் ஆரம்பித்த இடத்திற்கு சென்ற ஜெயம் ரவி.. சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்த சம்பவம்

பொதுவாகவே இளம் நடிகர்கள், ரஜினி மற்றும் கமல்ஹாசன் படங்களில் நடிக்க வேண்டும் என்று கனவுகளை வைத்திருப்பார்கள். அந்த வகையில் ஜெயம் ரவிக்கு எப்படியாவது கமல் உடன் நடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்திருக்கிறது. ஏனென்றால் கமலின் தீவிர ரசிகர்களில் ஒருவர் தான் ஜெயம் ரவி. அதை நிறைவேற்றும் விதமாக ஜெயம் ரவியை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதற்கு கமல் ஒத்துக் கொண்டார்.

அதனால் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் ஜெயம் ரவி கமிட்டாய் இருப்பது இவருடைய கேரியருக்கு ஒரு பிரகாசத்தை கொடுக்கும். மேலும் ஜெயம் ரவியை பொருத்தவரை சிங்கிள் ஹீரோவாக நடித்து பெயர் வாங்குவதைவிட மல்டி ஸ்டார் படங்களில் நடித்தால் அதில் இவருடைய தனித்துவமான நடிப்பை பார்க்க முடியும். கண்டிப்பாக இந்த டிராக் இவருக்கு ஒர்க்கவுட் ஆகும்.

அதனால் தக் லைப் படத்தின் மூலம் மீண்டும் ஜெயம் ரவிக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம். அத்துடன் இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா ஆகியோரும் கமிட்டாகி இருக்கிறார்கள். மணிரத்தினத்துடன் 36 வருடங்களுக்குப் பின் கமல் இணைந்திருப்பது ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: உதயநிதி மறுத்ததால் ஜெயம் ரவியுடன் கமிட்டான கிருத்திகா.. விஜய் சேதுபதி பட சாயலில் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு

Trending News