புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்.. 700 எபிசோடோடு ஊத்தி மூடிய சன் டிவி

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வந்த பிரபல சீரியல் ஆனது தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சீரியல் நிறைவடைய உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் ரோஜா  சீரியல் நிறைவடைந்த நிலையில் அதனைத் தொடர்ந்து மிகவும் பிரபலமாக உள்ள மற்றொரு சீரியலும் நிறைவடைய உள்ளது. அதிலும் இந்த சீரியலில் வரக்கூடிய ரொமான்ஸ் காட்சிக்காகவே எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் சீரியல் நிறைவடைய போகிறது என்ற அதிர்ச்சி தகவலை கேட்டதும் ரசிகர்களின் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

Also Read: முதல் மரியாதை ராதாவாக மாறிய கருப்பழகி.. சன் டிவி நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்

இதனைத் தொடர்ந்து அப்பா மகள் பாசத்தை மையமாகக் கொண்டு சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும்சீரியல் தான் கண்ணான கண்ணே. தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் 700 எபிசோடுகளை வெற்றிகரமாக தாண்டியுள்ளது. மேலும் இந்த சீரியலில் ராகுல் ரவி,  பப்லு பிரிதிவிராஜ், நிமோஷிகா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அதிலும் சின்னத்திரையில் யுவா, மீரா ஜோடியானது மக்களின் ஃபேவரட் ஜோடியாக இருந்து வருகின்றனர். இந்த சீரியலானது 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, தற்பொழுது வரை சுவாரஸ்யம் குறையாமல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறது.அதிலும் மேனகாவிற்கு எதிராக ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Also Read: சீரியலில் பட்டையை கிளப்பும் சினிமா இயக்குனர்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்

இதனைத் தொடர்ந்து கௌதம் மற்றும் கௌசல்யா தம்பதிக்கு பிறந்துள்ளவர் தான் மீரா. கௌதம் தனது மனைவியின் மரணத்திற்கு குழந்தை தான் காரணம் என்று வெறுத்து ஒதுக்கி வைக்கிறார். பாசத்திற்கு ஆக ஏங்கும் ஒரு பெண்ணின் ஆழமான உணர்வை விளக்கும் விதத்தில் உணர்வு பூர்வமாக அமைந்துள்ளது. நீண்ட  காலத்திற்கு பின் ஒரு கட்டத்தில் அப்பாவின் பாசத்தினை மீரா பெறுகிறார்.

மேலும் கௌதம் குடும்பத்தை அழித்தே தீருவேன் என்ற நோக்கத்தில் இருந்து வருகிறார் மேனகா. இவருடைய அனைத்து சொத்துக்களையும் அபகரித்த நிலையிலும், மீரா குடும்பத்தை நடு ரோட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்னும் பழிவாங்கும் எண்ணத்தில் இருந்து வருகிறார். பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மேனகாவிற்கு எதிரான மீராவின் அதிரடியான  ஆட்டமாடுது ஆரம்பமாகியுள்ளது.

Also Read: புது சீரியல் என்ட்ரியால் பாய் பிரண்டுடன் ஓவர் நெருக்கம் காட்டும் ஆல்யா.. அம்மணி சிக்கும் அடுத்த சர்ச்சை

Trending News