திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நிஜ சந்திரமுகியை இறக்கிவிட்டு பயமுறுத்தும் வாசு.. ரிலீஸ் தேதியுடன் வெளியான அடுத்த டிரைலர்

Chandramukhi 2 Trailer: பி வாசு இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற படம் சந்திரமுகி. மேலும் திரையரங்குகளில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெருமையை சந்திரமுகி படம் தான் தற்போது வரை பெற்று இருக்கிறது. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு வாசு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார்.

லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா மற்றும் வடிவேலு ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த சூழலில் செப்டம்பர் முதல் வாரமே சந்திரமுகி 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் வேலைகள் மீதம் இருந்ததால் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Also Read : மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

மேலும் ரிலீஸ் நெருங்குவதால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக படக்குழு ரிலீஸ் தேதியுடன் டிரைலரை வெளியிட்டுள்ளது. அதில் தொடக்கத்திலேயே ஜோதிகாவின் புகைப்படம் இடம் பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி இருந்தது. மேலும் முதல் பாகத்தில் ஜோதிகா தன்னை தானே சந்திரமுகி ஆக நினைத்துக் கொண்டு பேயாக மாறிவிடுவார்.

ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நிஜ சந்திரமுகி இறங்கி வந்துள்ளதாக வடிவேலு கூறி இருக்கிறார். அதன்படி கங்கனா ரனாவத் அவர் தான் சந்திரமுகியாக நடித்திருக்கிறார். அதிலும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் பட்டையை கிளப்பி இருக்கிறார். பேய் படம் என்றாலே அவருக்கு கைவந்த கலை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Also Read : ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

அதேபோல் சந்திரமுகி 2 படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் வடிவேலு, ரஜினி காம்பினேஷன் சந்திரமுகி படத்தில் எப்படி நன்றாக இருந்ததோ அதேபோல் தான் லாரன்ஸ், வடிவேலு கூட்டணியும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இப்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trending News