புதன்கிழமை, ஜனவரி 22, 2025

எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்.. மிரட்டும் சிவகார்த்திகேயனின் மாவீரன் ட்ரெய்லர்

Maaveeran Trailer: சினிமாவில் தற்போது முக்கிய நடிகர்களுள் ஒரு இடத்தை பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவருக்கு பிரின்ஸ் படம் சறுக்கலாக அமைந்தது. இப்போது மாவீரன் மற்றும் அயலான் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த மாதம் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வெளியாகிறது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும் மிஸ்கின், சரிதா, யோகி பாபு சுனில் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். மாவீரன் படத்தை சாந்தி டாக்கிஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Also Read : பிட்டுப்பட நடிகையுடன் ஜோடி போடும் சிவகார்த்திகேயன்.. அத காப்பாத்திக்கோங்க என அபாய சங்கு ஊதியாச்சு

ஏனென்றால் சிவகார்த்திகேயன் லுக் மொத்தமாக மாறி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ள ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலையில் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் இந்த ட்ரெய்லரில் ஆரம்பத்தில் பயந்த சுபாவம் கொண்டவராக உள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் அரசியல்வாதியாக இருக்கும் மிஸ்கினை எதிர்க்க சிவகார்த்திகேயனுக்கு துணிச்சல் கொடுக்கிறார் அதிதி சங்கர். மாவீரன் என்ற ஒரு கதையில் மூழ்கி தனக்கான தைரியத்தை சிவகார்த்திகேயன் வளர்த்துக் கொள்கிறார்.

Also Read : பாலிவுட் ஹீரோயினுடன் ஜோடி போடும் சிவகார்த்திகேயன்.. ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் அனல் பறக்கும் அப்டேட்

மேலும் மாவீரன் படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வினியோகம் செய்கிறது. கண்டிப்பாக சிவகார்த்திகேயன் சினிமா கேயரில் மிகப்பெரிய திருப்புமுனையை மாவீரன் படம் ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

Trending News