தமன்னா இப்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய், அஜித் உட்பட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் படங்களை தவிர்த்து விட்டு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
இப்படி ஒரு சின்ன பிரேக்குக்கு பிறகு அவர் ரஜினியின் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது அவர் அரண்மனை 4 படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அது மட்டுமின்றி இன்னும் சில படங்களும் அவருடைய கைவசம் இருக்கிறது. இப்படி பிஸியாக இருக்கும் நேரத்திலும் அவர் பாலிவுட் ஹீரோ ஒருவருடன் நெருக்கம் காட்டிக் கொண்டிருக்கிறாராம்.
Also read: மார்க்கெட் இறங்கியதால் மதிக்காத சுந்தர் சி.. ஒயிட் பியூட்டி தமன்னாவின் பரிதாப நிலை
ஏற்கனவே இது குறித்து பல கிசுகிசுக்கள் வெளிவந்திருந்தாலும் தற்போது இது உண்மைதான் என்று உறுதியாகும் அளவுக்கு தமன்னாவின் செயல்பாடுகள் இருக்கிறது. அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் இளம் கதாநாயகனாக இருக்கும் விஜய் வர்மாவை தான் தமன்னா காதலித்து வருகிறார்.
இந்த ஜோடி அடிக்கடி பொது இடங்களில் தென்பட்டாலும் தங்கள் காதல் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் பார்ட்டிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மீடியாவையே கலக்கியது. அதிலும் தமன்னா ஒரு பார்ட்டியில் விஜய் வர்மாவுக்கு முத்தம் கொடுக்கும் படியாக இருந்த வீடியோ ஒன்று பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Also read: ஐட்டம் டான்ஸராக மாற பல கோடி சம்பளம் கேட்ட தமன்னா.. சமந்தாவை ஓவர் டேக் செஞ்சிருவாங்க போல
இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரும் ஜோடியாக அவுட்டிங் வந்த போது எடுக்கப்பட்ட போட்டோ இப்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் தமன்னாவின் காதலை உறுதி செய்துள்ளனர். அதிலும் இந்த ஜோடி ஒரே மாதிரி கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தது இவர்களின் காதலை அப்பட்டமாக காட்டுகிறது.
மேலும் எப்போது உங்கள் திருமணம் என்று இப்போதே ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் இந்த ஜோடி கமுக்கமாக தங்கள் காதலை மறைத்து வைத்து வருகின்றனர். ஆனால் இதுபோன்று அடிக்கடி லவ்வருடன் வசமாக சிக்கிக் கொள்ளும் தமன்னா விரைவில் தன்னுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு உடையில் கலக்கலாக வந்த ஜோடி
