புதன்கிழமை, நவம்பர் 20, 2024

படாத பாடுபடும் இயக்குனர்கள்.. ராஜதந்திரத்தை பயன்படுத்தும் அனிருத்

அனிருத் இந்த இளம் வயதிலேயே பல சாதனைகள் புரிந்துவருகிறார். தற்போது வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களில் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். விஜய்யின் பீஸ்ட் படத்தில் அனிருத் இசையமைத்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

மேலும் நெல்சன் இயக்கும் தலைவர் 169 படத்திலும் அனிருத் தான் இசையமைக்கிறார். இவ்வாறு நிற்கக்கூட நேரம் இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவில் அனிருத்தின் கொடி ஓங்கி நிற்கிறது. தற்போதே இவ்வளவு சாதனைகள் புரிந்து வரும் அனிருத் இதில் இன்னும் பக்குவம் அடைந்த பிறகு பல சாதனைகள் புரிவார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால் அனிருத்தை பற்றி சில விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதாவது பீஸ்ட் படத்திலேயே வேறு ஒரு படத்தின் இசையை அனிருத் காப்பி அடித்துயுள்ளார் என்ற சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இப்போது அனிருத் தன் பெயரை கெடுத்துக் கொள்ளும் விதமாக சில செயல்களை செய்து வருகிறார்.

அதாவது ஒரு படத்தில் கமிட் ஆன பிறகு எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவுக்கு படத்தை இழுத்தடிக்கிறாராம். இதனால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் குறிப்பிட்ட நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் திணறுகிறார்கள்.

அனிருத் ஏன் இவ்வாறு செய்கிறார் என்றால் உடனே நாம் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டால் நமது வெயிட் குறைந்துவிடும் என்பதால் வேணுமென்றே கஷ்டப்பட்டு முடித்துக் கொடுப்பது போல வேலையை செய்கிறாராம்.

அதுமட்டுமன்றி உடனே செய்து கொடுத்துவிட்டால் ஏதாவது குறை சொல்லி அதை மாற்றுங்கள், இதை மாற்றுங்கள் என திரும்ப தொந்தரவு செய்யக்கூடாது என்று இப்படி ஒரு தந்திரத்தை அனிருத் செயல்படுத்தி வருகிறார். இதை முன்கூட்டியே தெரிந்தவர்கள் அனிருத்தை நாடாமல் வேறு இசையமைப்பாளரை தேர்வு செய்து வருகின்றனர். இதனால் அனிருத்தின் பட வாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே வருகிறதாம்.

- Advertisement -spot_img

Trending News