புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மாரிமுத்து இல்ல டிஆர்பியும் இல்ல இழுத்தடிக்கும் எதிர்நீச்சல்.. திக்கு திசை தெரியாமல் தடுமாறும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் அனைவரது ஃபேவரைட் நாடகமாக ஜொலித்துக் கொண்டு வந்தது. அதிலும் குணசேகரன் கதாபாத்திரம் தூக்கலாக அமைந்து மக்களின் நாயகனாகவே வளம் வந்தார். அதனாலேயே இந்த நாடகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதில் யார் கண்ணு பட்டுச்சோ மொத்தமும் தலைகீழாக மாறிவிட்டது. குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து இல்லாததால் தற்போது திக்கு திசை தெரியாமல் தடுமாறிக் கொண்டு வருகிறது.

இருந்தாலும் எப்படியாவது இந்த நாடகத்தை தூக்கி நிறுத்த வேண்டும் என்று மொத்த டீமும் போராடிக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் நாளுக்கு நாள் கதை சொதப்பிக்கொண்டு ஜவ்வு மாதிரி இழுத்து அடித்து தான் இருக்கிறார்கள். இது என்ன எதிர்நீச்சலுக்கு வந்த சோதனையா என்று சொல்வதற்கு ஏற்ப இருக்கிறது. அதுவும் திருவிழா நிகழ்ச்சியை வைத்து மாத கணக்கில் இழுத்து வருகிறார்கள்.

இதில் யாருக்கு என்ன ஆகப்போகிறது என்பதுதான் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக இருக்கப் போகிறது என்று தெரிந்ததனால் கொஞ்சம் விறுவிறுப்பாக வந்தது போல் இருந்தது. ஆனால் அதையே சுற்றி வளைத்து எதை சொல்லவேண்டுமோ அதை காட்டாமல் தேவையில்லாத சீன்கள், மொக்கையான காட்சிகளை வைத்து மறுபடியும் போர் அடிக்க வைக்கிறார்கள்.

Also read: ஜீவானந்தத்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சைக்கோ.. அடைக்கலம் கொடுக்க போகும் குணசேகரனின் மனைவி

அதாவது இப்பதான் இந்த நாடகத்தினுடைய உண்மையான லட்சணமே தெரிகிறது. இதுவரை இந்த நாடகத்திற்கு ஒன் மேன் ஆர்மியாக இருந்து தூக்கி நிறுத்தியது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து மட்டுமே. இவருடைய எதார்த்தமான நடிப்பு தான் மக்களை அதிகமாக கவர்ந்தது. அந்த வகையில் தற்போது இவர் இல்லாததால் இந்த நாடகம் பார்ப்பதற்கு சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டது.

அந்த வகையில் இது அனைத்தையும் சரிகட்டும் விதமாக மக்கள் எதிர்பார்ப்பின் படி குணசேகரன் மற்றும் கதிரின் கொட்டத்தை அடக்கும் வகையில் கதை இருந்தால் ஒருவேளை மக்களிடமிருந்து வரவேற்பை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் ஜீவானந்தம் வந்து அப்பத்தாவிற்கு உதவியாக நின்று குணசேகரனை தோற்கடிப்பார் என்று எதிர்பார்த்தால் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு மருமகள்கள் புலம்பிக் கொண்டு வருகிறார்கள்.

இதையாவது கொஞ்சம் பொறுத்துக்கெல்லாம். ஆனால் இந்த ஜான்சி ராணியின் அருவருப்பான பேச்சும், அடாவடித்தனமான செயலும் பார்ப்பவர்கள் மனதில் வெறுப்பை உண்டாக்குகிறது. ஆக மொத்தத்தில் எதிர்நீச்சலும் நல்லா இல்லை, சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கும் குறைந்துவிட்டது. இதற்கு பேசாமல் குணசேகரன் இல்லை என்று தெரிந்ததுமே அந்த நான்கு மருமகள்கள் ஜெயித்த மாதிரி காட்டி மக்களிடத்தில் இடம் பிடித்திருக்கலாம்.

Also read: குணசேகரன் கேரக்டர் எனக்கு துளி கூட செட்டே ஆகல தெறித்து ஓடிய கிடாரி.. வெளிநாட்டிலிருந்து வைரலாகும் புகைப்படம்

Trending News