வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அம்பிகா, ராதாவுக்கு எம்ஜிஆர் இடத்தை வாரி கொடுத்தது உண்மையா?. ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரபலம்

MGR: பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்றுவரை தமிழக மக்களால் கொண்டாடப்படும் தலைவராக இருக்கிறார்.

எம்ஜிஆர் மீது நிறைய பாசிட்டி விமர்சனங்கள் இருந்தாலும், அவ்வப்போது சில நெகட்டிவ் செய்திகளும் வெளியாகும்.

அதில் ஒன்றுதான் நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவுக்கு எம்ஜிஆர் 200 ஏக்கர் நிலத்தை கொடுத்தார் என்ற கதை. சென்னையில் உள்ள ARS ஸ்டுடியோ அம்பிகா மற்றும் ராதாவுக்கு சொந்தமானது.

இங்கு ஷூட்டிங் எடுக்க ஒரு நாள் வாடகை மட்டும் பத்தில் இருந்து 15 ஆயிரம். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் தான் அம்பிகா மற்றும் ராதிகா.

ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரபலம்

அக்கா தங்கை இருவருமே போட்டி போட்டு முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி போட்டு விட்டனர். எப்போதும் சில தமிழ் சினிமா படங்களில் நடித்து வருகிறார்.

ராதா ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். அம்பிகா ராதா என்ற உடனே எம்ஜிஆர் எழுதிக் கொடுத்த 200 ஏக்கர் நிலம் செய்தியும் வெளிவரும்.

இது பற்றி இயக்குனர் சித்ரா லட்சுமணன் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். அதாவது எம்ஜிஆர் அவர்களுக்கு நிலம் கொடுத்தார் என்பதில் எந்தவித உண்மையும் கிடையாது.

இவர்கள் இருவரும் சேர்ந்து தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தை தான் வாங்கி இருக்கிறார்கள். அதற்கு பக்கத்திலேயே இயக்குனர் பாரதிராஜாவின் இடமும் இருக்கிறது.

இவர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்து வாங்கிய நிலம் தான் அது.

மேலும் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடிகைகளுக்கு இடம் எழுதி வைத்திருந்தால், எதிர்க் கட்சிகள் அவரை சும்மா விட்டிருப்பார்களா என கேள்வி கேட்டிருக்கிறார் சித்ரா லட்சுமணன்.

- Advertisement -

Trending News