வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்- விஜயகாந்த் உறவு விரிசலின் பின்னணி காரணம்.. பிரேமலதா போட்ட அரசியல் ஸ்கெட்ச்

Captain Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி விட்டது. அவர் இறந்த பிறகு அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள், பல பிரபலங்களால் பேசப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட மனிதன் இருந்த காலத்தில் நாம் இருந்திருக்கிறோம் என்பதே நமக்கு பெருமை தான் என்னும் அளவுக்கு விஜயகாந்த் பற்றி நிறைய நல்ல விஷயங்கள் வெளியே வருகின்றன. அதே நேரத்தில் விஜய் மற்றும் விஜயகாந்த் இடையே இருந்த உறவு விரிசலும் வெளியில் வந்திருக்கிறது.

விஜயகாந்த், இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் உடன் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். அப்போது ஏற்பட்ட நட்புக்கு பரிசாகத்தான் செந்தூரப் பாண்டி என்னும் படத்தின் மூலம் விஜயகாந்த், விஜய்க்கு அடையாளம் கொடுத்தார். அந்த படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதே நேரத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களால் விஜயகாந்த் அடைந்த நன்மையையும் மறந்து விடக் கூடாது. விஜயகாந்த் சினிமாவில் மார்க்கெட் இல்லாத சமயங்களில் சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி போன்ற படங்களின் மூலம் அவரை தூக்கி விட்டவர் எஸ் ஏ சி. அப்படி இருக்கும் பட்சத்தில் கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட விஜய் சில கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டார்.

Also Read:விஜயகாந்த் இறந்த பிறகு எழும் 5 கோரிக்கைகள்.. பிரேமலதா ஆசை நிறைவேறுமா?

விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போது விஜய் நேரில் சென்று பார்க்காதது தான் இந்த வெறுப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த ஒரு வருடங்களாகவே விஜய், விஜயகாந்தை நேரில் சென்று பார்ப்பதற்கு அனுமதி கேட்டிருந்தார் எனவும், விஜயகாந்த் குடும்பத்தினர் தான் அவரை பார்க்க விடாமல் தடுத்து வந்தார்கள் எனவும் இப்போது அவருடைய மரணத்திற்கு பிறகு சொல்லப்படுகிறது.

பிரேமலதா போட்ட அரசியல் ஸ்கெட்ச்

உண்மையில் விஜய்க்கு அனுமதி கொடுக்காமல் மறுத்து வந்தது பிரேமலதா விஜயகாந்த் தான். விஜயகாந்தின் இரண்டாவது மகன் ஹீரோவாக 2,3 படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த பெயரை வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் பிரேமலதா தன் மகன் சண்முக பாண்டியன் சினிமா வாழ்க்கைக்கு ஏதாவது உதவி செய்யும்படி விஜய் இடம் கேட்டிருக்கிறார். விஜய் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அதன் பின்னர் பதில் எதுவும் சொல்லவில்லையாம்.

கோபத்தில் தான் விஜய், விஜயகாந்த்தை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட போது பிரேமலதா அனுமதிக்கவில்லை. கேப்டன் அரசியலில் ஆக்டிவாக இல்லாத நேரத்தில் விஜய் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் விஜய், அவரை நேரில் வந்து பார்த்தால் விஜய்யின் அரசியலுக்கு அது மிகப்பெரிய ஆதாயமாகிவிடும் என்பதால் தான் பிரேமலதா மறுத்திருக்கிறார்.

Also Read:விஜயகாந்த், ராவுத்தரை பிரிக்க நடந்த சூழ்ச்சி.. கேப்டன் எடுத்த முடிவின் பின்னணி

Trending News