Nayanthara: நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் ஹோம் ஸ்டுடியோ ஒன்றை திறந்து இருக்கிறார். இதற்கு அவருடைய ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சோழியான் குடுமி சும்மா ஆடாது என்று ஒரு பழமொழி ஒன்று. அப்படித்தான் நயன்தாராவின் ஸ்டூடியோ திட்டமும். பாலிவுட் உலகத்தை மலைபோல் நம்பி களம் இறங்கிய நயனுக்கு அங்கு கிடைத்தது சறுக்கல் தான்.
சோழியான் குடுமி சும்மா ஆடுமா?
விக்னேஷ் சிவனுக்கு அடுத்து ரிலீசுக்கு LIK படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று நயன்தாராவுக்கு மூக்குத்தி அம்மன் 2 அதிக எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கிறது.
சென்னையிலேயே தங்கி நடிப்பு மற்றும் தயாரிப்பு என முனைப்புடன் செயல்பட இருக்கிறார்கள் இந்த தம்பதி.
தங்களுடைய ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் நயன்தாரா துறையில் களமிறங்க இருக்கிறார். அதே போன்று சொந்த தயாரிப்பில் விக்னேஷ் சிவன் படம் இயக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
வந்தாரை வாழவைக்கும் சென்னை நயன்தாராவுக்கு மறு வாழ்க்கை கொடுக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.