திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

வீரா சீரியலில் வீராவிடம் வள்ளி சொன்ன உண்மை.. கண்மணி வாழ்க்கைக்காக பலியாடாக சிக்கப்போகும் மாறன்

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், மாறன் ஏதோ ஒரு உண்மையை மறைக்கிறார் என்பதை வீரா தெரிந்து கொண்டார். அதே நேரத்தில் அண்ணனின் இறப்பு விபத்து இல்லை கொலை என்று ஏன் மாறன் சொல்ல வேண்டும். யாரையோ காப்பாற்றுவதற்காக மாறன் இந்த மாதிரி பண்ணுகிறார் என்பதை வீரா தெரிந்து கொண்டார்.

அதனால் உண்மையை கண்டுபிடிக்கும் விதமாக மாஸ்க் போட்டுக் கொண்டு சாட்சி சொன்ன நபரை கண்காணிக்கிறார். அதன்படி காசுக்காக தான் சாட்சி சொன்னவர் ஏதோ பொய் சொல்கிறார் என்ற விஷயத்தை வீரா புரிந்து கொண்டார். அடுத்ததாக வீரா பண்ணிய ஒரு விபத்தை மாறன் பண்ணியதாக ஏற்றுக் கொண்டார். அதை ஏன் மாறன் செய்ய வேண்டும்.

அத்துடன் அண்ணனின் ருத்ராட்சக் கொட்டை ஆட்டோவில் தான் இருக்கிறது, அப்புறம் எப்படி மாறன் ரூமுக்கு வந்தது என்பதை வைத்து வீரா ரொம்பவே குழப்பத்தில் இருக்கிறார். இதோடு ராகவன் பணத்தை திருடியதற்கு ஏன் மாறன் தான் திருடியதாக பழியை போட்டுக் கொண்டார் என்பதில் குழப்பமான வீரா, இதற்கெல்லாம் விடை தெரிய வேண்டும் என்றால் வள்ளி அத்தை இடம் கேட்டால் தான் தெரியும் என்று வள்ளி அத்தை இடம் கேட்கிறார்.

அப்பொழுது வள்ளி அத்தை எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருப்பதை பார்த்து கோபமான வீரா, ஏதோ ஒரு உண்மையை என்னிடம் மறைக்கிறீங்க. அது என்னன்னு இப்ப நீங்க சொல்லலைன்னா நான் மொத்தமாக தலைமுழுகி இந்த வீட்டை விட்டு போய் விடுவேன் என்று பிளாக்மெயில் பண்ண ஆரம்பித்து விட்டார்.

உடனே இதுக்கு மேலேயும் உன்னிடம் நான் மறைக்க விரும்பவில்லை என்று வள்ளி சொன்ன உண்மை என்னவென்றால் உங்க அண்ணனை விபத்து பண்ணியது மாறன் இல்லை ராகவன் தான் என்று சொல்லிவிடுகிறார். இதை கேட்டதும் வீரா அதிர்ச்சியாகிவிட்டார். ஆனாலும் வீராவுக்கு தெரிந்த உண்மையை யாரிடமும் சொல்ல முடியாது.

ஏனென்றால் வீராவை பொருத்தவரை அக்காவின் வாழ்க்கை தான் ரொம்ப முக்கியம். அந்த வகையில் கண்மணி வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மாறனை போல வீராவும் தியாகியாக நிற்கப் போகிறார். மாறன், அண்ணனுக்காக பழியை சுமந்து கொண்டார். வீரா அக்காவிற்காக தெரிந்த உண்மையை சொல்லாமல் மறைக்கப் போகிறார். ஆக மொத்தத்தில் இந்த இரண்டு தியாகிகளும் இருக்கும் வரை ராகவன் மாட்ட மாட்டார்.

Trending News