புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஆஹா ஸ்கிரீன் கிழிய போகுது.. கங்குவா கிளைமேக்ஸ் காட்சியில் சிறுத்தை சிவா வைத்த ட்விஸ்ட்

Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நாளை சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மேலும் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸை வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் கங்குவா தான் ட்ரெண்டாக இருந்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் இருக்கும் முக்கியமான சீக்ரெட் ஒன்று தற்போது கசிந்துள்ளது. அதாவது கங்குவா இரண்டு பாகங்களாக எடுக்கப்பட உள்ளதை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார்.

சூர்யாவுடன் இணையும் கார்த்தி

அதை அடுத்து முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி வர இருக்கிறாராம். உடன்பிறப்புகளான சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது.

அதை நிறைவேற்றும் பொருட்டு கங்குவாவில் கார்த்தி இணைந்துள்ளார். முதல் பாகத்தின் இறுதியில் அவர் வரும் காட்சிகள் இரண்டாம் பாகத்திற்கான லீடாக இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இரண்டாம் பாகத்தில் சூர்யா, கார்த்தியின் வெறித்தனமான காம்போவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அது மட்டும் இன்றி இந்த கிளைமாக்ஸ் காட்சி நிச்சயம் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வந்தது போல் பயங்கரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் கார்த்தியின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. எது எப்படியோ இந்த செய்தி தற்போது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. மேலும் வருடக் கணக்கில் காக்க வைத்த கங்குவா இன்னும் பல சஸ்பென்சை கொடுக்க இருக்கிறது. ஆக மொத்தம் தியேட்டரில் ஸ்கிரீன் கிழியும் அளவுக்கு ரசிகர்கள் அலப்பறை செய்யப் போவது மட்டும் உறுதி.

லீக்கான கங்குவா படத்தின் சீக்ரெட்

Trending News