ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பிக்பாஸ் எலிமினேஷனில் நடந்த டிவிஸ்ட்.. பரபரப்பை ஏற்படுத்தும் இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரசியத்தை கூட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்களில் கமல் வரும் எபிசோடுகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும். ஆண்டவரின் அதிரடி ஆட்டத்தை காண்பதற்காகவே ரசிகர்கள் தவறாமல் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்பார்த்தது போன்று அட்டகாசமாக இருந்தது. அதிலும் கடந்த சில நாட்களாகவே ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வரும் தனலட்சுமியை ஆண்டவர் ரோஸ்ட் செய்தது சூப்பர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோன்று தன்னுடைய நடவடிக்கைகளை திருத்திக் கொண்ட அசீம், கண்ணியமாக நடந்து கொள்ளும் விக்ரமன் ஆகியோரை பாராட்டவும் ஆண்டவர் மறக்கவில்லை.

Also read:விக்ரமனை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்.. வச்சி செஞ்சு விட்ட ஆண்டவர்

இப்படி கலகலப்பாக சென்ற நேற்றைய நிகழ்ச்சியை தொடர்ந்து இன்றைய எபிசோட் எப்படி இருக்கும் என்ற ஆவலும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் எதிர்பார்க்காத பல டிவிஸ்டுகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்பட இருக்கிறது. அதில் ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்த்து வந்த எலிமினேஷன் சம்பவமும் நடக்க இருக்கிறது.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய ஐந்து நபர்களில் செரினா மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேற இருக்கிறார். ஆனால் அதில் தான் தற்போது எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்துள்ளது. எப்போதுமே வெளியேறுபவர் யார் என்று சொல்லப்படும் அந்த எவிக்சன் கார்டில் போட்டியாளர்களின் பெயர் தமிழில் தான் இருக்கும். ஆனால் இந்த வாரம் செரினாவின் பெயர் மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது.

Also read:பாத்ரூமில் குயின்ஸி காலில் விழுந்த ஜனனி.. தெரியாம செஞ்சதை பில்டப்பாக்கிய பிக்பாஸ்

ஏனென்றால் நிகழ்ச்சியின் முக்கிய விதிமுறையே தமிழைத் தவிர வேறு மொழிகளில் பேசக்கூடாது என்பதுதான். ஆனால் செரினா ஆயிஷாவிடம் அடிக்கடி மலையாளத்தில் பேசுவது கடும் சர்ச்சையை கிளப்பியது. இதை இன்று வெளியான ப்ரோமோவிலும் ஆண்டவர் கடுமையாக பேசியிருந்தார். மேலும் இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடந்தால் ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்யவும் நான் தயங்க மாட்டேன் என்று கடுமையாக கண்டித்தார்.

அந்த வகையில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவே இப்படி ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்த நாட்களில் போட்டியாளர்கள் பிக் பாஸ் விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இன்றைய எபிசோடை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read:ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்த போட்டியாளர்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் ஆஸ்கர் நாயகி

Trending News