வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அச்சு அசல் நிஜ குடிகாரங்களாகவே வாழ்ந்த இரண்டே நடிகர்கள்.. ரஜினிகாந்த், கமலுக்கு நெருங்கிய கூட்டாளி

Tamil actors: சில கதாபாத்திரங்கள் இவர்களுக்கு மட்டும் தான் செட்டாகும் என தமிழ் சினிமா முடிவு எடுத்து விடும். அந்த மாதிரி அக்கா, அம்மா,  குடிகாரன், பிச்சைக்காரன் என ஒரு சில கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் இருக்கும். அப்படி குடிகார கதாபாத்திரத்திற்கு இன்று வரை செட்டான நடிகர்கள் இரண்டே பேர் தான்.

சுமார் 100 படங்களுக்கு மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர  கதாபாத்திரங்களில் நடித்து  அசத்தியவர் நடிகர் ஜனகராஜ். ரஜினியுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். கவுண்டமணி- செந்தில் ஜோடிக்கு போட்டியாக  ரஜினி மற்றும் ஜனகராஜின் அட்ராசிட்டி தான் திரையரங்கில் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.

Also Read: 42 வருடமாய் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்.. யாராலயும் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்.!

அதிலும் கொஞ்சம் இழுத்து இழுத்து பேசக்கூடிய ஜனகராஜின் வித்தியாசமான பேச்சு அவருக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்தியது. அதிலும் 80களில் குடிகார கேரக்டர் ஒன்று படத்தில் இருக்கிறது என்றால் உடனே அதற்கு நேராக ஜனகராஜின் பெயரை தான் எழுதுவார்கள். அந்த அளவிற்கு குடிகாரனாக பிசுறு தட்டாமல் நடிப்பார். போதையில் தள்ளாடுவதும் சரி, உளறுவதும் சரி அவருக்கு கைவந்த கலை.

இவர் ரஜினியின் படத்தில் பெரும்பாலும் நடிப்பது மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பரும் கூட. இதனால் இயல்பாகவே இவர்களுக்கிடையே நடக்கும் கேலி கிண்டல் அப்படியே படத்திலும் தொடரும்.  படிக்காதவன் படத்தில் இவர் ரஜினியிடம் குடித்துவிட்டு தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுப்பா! என்ற சீனில் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி அச்சு அசல் குடிகாரனை அப்படியே திரையில் காட்டியிருப்பார்.

Also Read: வெற்றிக்காக முட்டி மோதி கொண்டிருக்கும் ரஜினி.. மொத்தமாய் மண் அள்ளி போட்ட ஜெயிலர் பட ஹீரோயின்

அன்று ஜனகராஜ் என்றால் இன்று நடிகர் சந்தான பாரதி குடிகார கெட்டப்பிற்கு கச்சிதமாக பொருந்தினார். இவர் கமலுக்கு நெருங்கிய நண்பர். இவர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ஏஜென்டாக  உலக நாயகனுடன் சேர்ந்து நடித்திருப்பார்.

இதில் சந்தான பாரதி நிஜ குடிகாரர் போலவே  கமலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் குடிகாரனாக  சிறப்பாக நடித்திருப்பார். ஜனகராஜ் மற்றும் சந்தான பாரதி ஆகிய இவர்கள் இருவரையும் தான் தமிழ் சினிமா குடிகார கேரக்டர்னாலே கூப்பிட்டு கொடுக்கக்கூடிய தனித்துவமான நடிகர்களாக திகழ்ந்தனர்.

Also Read: பீதியில் இருக்கும் லைக்கா.. கட் அண்ட் ரைட் ஆக முடிவைச் சொன்ன சூப்பர் ஸ்டார்

Trending News