திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

அசிங்கப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. சக்களத்தி சண்டையை மிஞ்சும் மருமகள்கள்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் தற்போது ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே துரத்தி உள்ளார். தற்போது அவர்களுக்கு ஆதரவாக கதிர் தனது வீட்டுக்கு அழைத்து வந்து அரவணைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த வீடு மிக சிறியதாக இருப்பதால் மீனா மற்றும் ஐஸ்வர்யா இடையே கடுமையான வாக்குவாதங்கள் நிலவி வருகிறது. எங்கு படுப்பது, யார் முதலில் குளிப்பது என ஒவ்வொன்றுக்கும் சண்டை தான். இவர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தரமான செய்கை செய்து வருகிறார் முல்லையின் அம்மா பார்வதி.

Also Read : ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டரை தொடர்ந்து பிக்பாஸில் மலர்ந்த அடுத்த காதல்.. நிராகரித்த கதிரவன்

அதாவது ஐஸ்வர்யா மற்றும் மீனா இருவரும் ரூம் தேடுவதற்கு முன்பே பார்வதி அந்த ரூமில் உறங்குகிறார். இவரை எப்படியாவது எழுப்ப வேண்டும் என சக்காளத்தி இருவரும் கூச்சல் போட்டு ஒரு வழியாக அவரை வெளியே அனுப்பிவிட்டு காலையில் படுத்த தூங்குகிறார்கள்.

அடுத்ததாக குளிக்கும்போதும் மீனா, ஐஸ்வர்யா இடையே சண்டை வரும்போது இவர்களை தள்ளிவிட்டு பார்வதி குளிக்க சென்று விட்டார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்களை பார்வதி அசிங்கப்படுத்தி வருகிறார். ஆனால் கதிர் இவர்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்.

Also Read : பிக்பாஸ் பத்த வச்ச நெருப்பு இப்ப No.1 ட்ரெண்டிங்.. சின்னா பின்னமாகிப் போன அசீமின் ராஜதந்திரம்

மேலும் ரிஜிஸ்ட்ரேஷனை சீக்கிரம் முடித்துவிட்டு புதிய வீடு கட்ட வேண்டும் என மூர்த்தி பேசுகிறார். அதுவரைக்கும் இந்த வீட்டில் தான் இருக்கணுமா என அதிர்ச்சியில் வாயை பிளக்கிறார் மீனா. மேலும் கதிர் தொடர்ந்து பாண்டியன் மெஸ் ஹோட்டலை தான் நடத்த உள்ளார்.

இதைத்தொடர்ந்து ரிஜிஸ்ட்ரேஷன் தொடங்கி ஒவ்வொரு நாளும் வீட்டில் பிரச்சனை வெடிக்க உள்ளது. இதையெல்லாம் எப்படி சமாளித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புதிய வீடு கட்டுகிறது என்பதே அடுத்தடுத்த எபிசோடுகளாக வர இருக்கிறது.

Also Read : குடும்ப குத்து விளக்கு மாதிரி நடிக்கிறது.. காசுக்காக பிக்பாஸ் லிப் லாக் நடிகை செய்த மட்டமான வேலை

Trending News