செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சசிகலாவின் சென்னை வருகையில் தொடர்ந்து ஏற்பட்ட அசம்பாவிதம்.. இனிமேலும் என்னவெல்லாம் ஆகப்போகுதோ.?

கர்நாடக சிறையில் சொத்து குவிப்பு வழக்கிற்காக சிறைவாசம் செய்த சசிகலா கடந்தவாரம் விடுதலையாகி, அதன்பின் பெங்களூர் தனியார் பண்ணை வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், சென்னைக்கு இன்று வந்துள்ளார்.

அந்த சமயம் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சசிகலாவிற்கு வரவேற்பு அளிப்பதற்காக காரில் வைத்திருந்த பட்டாசு வெடிக்க தொடங்கியது. இதனால் அந்தக் கார் முழுவதும் பற்றி எரிய தொடங்கியதும், நெருப்பு மளமளவென பரவி மற்றொரு காரும் தீப்பற்றி எரியத் தொடங்கிவிட்டது.

அதன்பின் தீயணைப்பு படையினர், பற்றி  எரிந்த காரை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது மட்டுமில்லாமல் சசிகலா காலை கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் வழியில் ஒரு கார் சசிகலாவின் காரை முந்த முயற்சிக்கும்போது சசிகலா வந்த காரின் மீது லேசாக மோதியது. பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படாவிட்டாலும் இந்தச் சம்பவம் சசிகலாவை அதிர்ச்சியில் உள்ளாக்கியது.

sasikala-car-accident

அதன்பின் தமிழக எல்லை வந்ததும் அந்த வாகனத்தில் இருந்து வேறு வாகனத்திற்கு மாறினார். அதன்பின் வழியில் முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இவ்வாறு சசிகலாவிற்கு தொடர்ந்து விபத்துக்கள் வழி நடுவே நடந்ததால், சசிகலாவின் சென்னை வருகை நல்ல சமிக்கியாக இல்லை என்பது சசிகலாவிற்கு நெருக்கமானவர்களின் கருத்தாகும்.

அதேபோல் 9ம் தேதி சசிகலாவிற்கு உகந்த நாளாக இருந்ததால், அன்று வர முடிவு செய்த சசிகலாவை டிடிவி தினகரன் திட்டமிட்டு இன்றுவரை வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Trending News