புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

காதல் மன்னனின் நிறைவேறாத ஆசை.. கனவுக்கு உயிர் கொடுத்த ஜெமினியின் குடும்பம்

Actor Gemini Ganesan: தன் தோற்றத்தாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் ஜெமினி கணேசன். சிவாஜி, எம்ஜிஆருக்கு போட்டியாக இவரின் படங்களும் இடம்பெற்றது. அவ்வாறு இருப்பின் இவரின் நிறைவேறாத ஆசை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

அந்த காலகட்டத்தில் படிப்பை முக்கியம் என கருதி இவர் மேற்கொண்ட முயற்சி இவரை பட்டதாரியாக மாற்றியது அதன் பின் ஜெமினி ஸ்டுடியோவை நிர்வகித்தார். தன்னுடைய திடீர் திருமண வாழ்க்கையால் மருத்துவராகும் கனவை கைவிட்டார்.

Also Read: கவிஞரை செருப்பால் அடித்த எம்ஜிஆர்.. பழகிய பாவத்திற்கு இப்படியெல்லாம அசிங்கப்படுத்துவது ?

அதன்பின் நடிகராக தமிழ் சினிமாவில் இவர் நடித்த படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்த பின் சிறந்த நடிகராகவும் திகழ்ந்தார். இருப்பினும் மருத்துவர் கனவு மட்டும் இவரின் மனதை விட்டு செல்லவில்லை. அதனால் தான் மகளை மருத்துவம் படிக்க வைத்தார்.

அதைப் பொறுத்து இவரின் முதல் மகளான டாக்டர் கமலா ஜெமினி கணேசன் சென்னையில் மிக முக்கியமான மகப்பேறு மருத்துவராக மாறினார். மேலும் இவரின் சாதனை ஆக இந்தியாவில் முதல் டெஸ்ட் பேபியை அறிவிக்கப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.

Also Read: சூர்யா-ஜோதிகா காதலுக்கு அணிலாய் இருந்த நடிகர்.. எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது கதையான சம்பவம்

அது மட்டுமில்லாமல் இவரின் இரண்டாவது மகளான ஜிஜி தமிழ் சினிமாவில் அப்பாவை போல சாதிக்கும் ஆசையில் நினைவெல்லாம் நித்யா என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அப்படம் அவருக்கு போதிய வரவேற்பு பெற்று தரவில்லை என்பதால் சினிமாவை விட்டு விலகினார். அதைத்தொடர்ந்து மருத்துவத்துறையில் ஈடுபட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான துறையில் பெருதளவு பணியாற்றினார்.

அதை தொடர்ந்து ஜெமினி கணேசனின் அத்தையான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சென்னையில் மிக முக்கியமான மருத்துவர் ஆவார். அவ்வாறு இவர்கள் இவர்களின் மகன் மகள்களை அனைவரையும் மருத்துவத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். ஜெமினி கணேசனின் மறக்க முடியாத மருத்துவ கனவை தற்பொழுது பெரியதளவு விரிவடைந்து இவர்களின் குடும்பம் சாதித்து வருகின்றது.

Also Read: மில்க் பியூட்டி தமன்னாவை வலையில் சிக்க வைத்த விஜய்.. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டான்

Trending News